இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாரோ?
இளவரசி டயானா உயிருடன் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பாரோ என வியக்கவைத்துள்ளது, அவரது குடும்ப உறுப்பினர் ஒருவரின் புகைப்படம் ஒன்று!
அந்த புகைப்படம்...
இளவரசி டயானாவின் சகோதரரான சார்லஸ் ஸ்பென்சர், தனது தாயாகிய ஃப்ரான்செஸ் ஷாண்ட் கிட்டின் 90ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது புகைப்படம் ஒன்றை சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தைக் கண்ட மக்கள், அது இளவரசி டயானாவை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ளார்கள்.
மேலும், டயானா தனது தாயாகிய ஃப்ரான்செஸுடன் காணப்படும் ஒரு புகைப்படமும் வெளியாகி, டயானா இப்போது உயிருடன் இருந்திருந்தால் இப்படித்தான் இருப்பாரோ என ஒரு கணம் யோசிக்கவைக்கும் வகையில் அமைந்துள்ளது.

Credit : Brendan Monks/Mirrorpix/Getty
ஃப்ரான்செஸ், உடல் நலக்குறைவு காரணமாக தனது 68ஆவது வயதில் மரணமடைந்துவிட்டார்.
துயரம் என்னவென்றால், அவர் உயிருடன் இருக்கும்போதே, தன் மகளான டயானா மற்றும் மகன் ஜான் ஸ்பென்சர் ஆகியோரின் மரணத்தையும் பார்க்க நேர்ந்தது.
ஃப்ரான்செஸ் 2004ஆம் ஆண்டு மரணமடைய, அவரது மகளான டயானாவோ, 1997ஆம் ஆண்டு, தனது 36ஆவது வயதிலேயே உயிரிழந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |