பொலிஸ் உயர் அதிகாரி மகன் மரணம்: கொலையா? அதிரவைத்துள்ள ஆதாரம்
இந்தியாவின் பஞ்சாபில் பொலிஸ் உயர் அதிகாரியாக இருந்த ஒருவரது மகன் மரணமடைந்த வழக்கில் பயங்கர திருப்பம் ஒன்று உருவாகியுள்ளது.
பொலிஸ் அதிகாரி மகன் மரணம்
பஞ்சாப் DGPயாக இருந்தவர் முகம்மது முஸ்தபா. அவரது மனைவியான ரஸியா சுல்தானா முன்னாள் கேபினட் அமைச்சராவார்.
தம்பதியரின் மகனான அகில் அக்தர் (35). கடந்த வியாழனன்று, அதாவது, அக்டோபர் மாதம் 16ஆம் திகதி தனது வீட்டில் சுயநினைவற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூற, மறுநாள் அவரது உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன.
வெளியாகியுள்ள திடுக் தகவல்
இந்நிலையில், அகில் மரணம் குறித்து ஷம்ஷுதீன் சௌத்ரி என்பவர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
அதற்கு ஆதாரமாக, அகில் சில மாதங்களுக்கு முன் தனது சமூக ஊடகக் கணக்கில் வெளியிட்ட வீடியோக்களை வெளியிட்டுள்ளார் சௌத்ரி.
அந்த வீடியோக்களில், அகில் அதிரவைக்கும் சில பயங்கர தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதாவது, தனது மனைவிக்கும், தன் தந்தைக்கும் தவறான உறவு இருப்பதாகவும், அது தனக்குத் தெரியவந்ததால் தான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அகில்.
மேலும், இந்த விடயம் தனக்கு தெரியவந்ததால், தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அகில் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் உயர் அதிகாரியாக இருந்த தன் தந்தை, தன் மீது பொய் வழக்குப் போடலாம் என்றும், தான் உயிர் பயத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அகில்.
முன்னாள் அமைச்சரான தனது தாயும், தன் சகோதரியும் தன் தந்தையின் மோசமான செயலுக்கு உடந்தை என்றும், உண்மை தெரியவந்ததால், தான் கொல்லப்படலாம் என்றும் கூறியுள்ளார் அகில்.
அதிரவைக்கும் இந்த தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சௌத்ரியின் புகாரின் பேரில், முன்னாள் டிஜிபி முஸ்தபா, அவரது மனைவி சுல்தானா, தம்பதியரின் மகள் மற்றும் மருமகள் மீது கொலை மற்றும் சதி குற்றச்சாட்டுகள் தொடர்பில் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.