முடி உதிர்வுக்கு முட்டை! இந்த பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்தினாலே போதுமாம்
முடி உதிர்தல் பிரச்சினை மிகப்பெரிய பிரச்சினையான உருவெடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
இதை கட்டுப்படுத்த முட்டை உதவியாக இருக்கிறது.
ஏனெனில் முட்டை நம்முடைய தலைமுடிக்கு இயற்கையான கண்டிஷ்னராகவும் தலைமுடி சேதமாவதை தடுக்கவும் முடி உதிர்தலை கட்டுப்படுத்தவும் முடியின் வளர்ச்சியை தூண்டவும் உதவுகிறது.
முட்டையை நம்முடைய தலைமுடியில் பல்வேறு வழிகளில் நாம் ஹேர்மாஸ்க்காக அப்ளை செய்யலாம்.தற்போது முடி உதிர்வினை தடுக்க கூடிய சூப்பரான ஹேர்மாஸ் ஒன்றை எப்படி தயாரிப்பது என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- முட்டை வெள்ளைக்கரு - 2
- நெல்லிக்காய் பொடி - 2 ஸ்பூன்
- சீயக்காய் பொடி - 2 ஸ்பூன்
- கரிசலாங்கண்ணி பொடி - 2 ஸ்பூன்
- துளசி பொடி - 1 ஸ்பூன்
- சீயக்காய் பொடி - 1 ஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்
- டீ டிக்காஷன் - 4 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
-
எல்லா பொருள்களையும் நன்றாகக் கட்டிகள் இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.
- இதை தலையில் வேர்க்கால்கள் முதல் நுனி வரைக்கும் அப்ளை செய்து அதை அப்படியே ஒரு மணி நேரம் வரை தலையில் ஊற விட வேண்டும்.
- இந்த ஹேர்பேக் நன்கு உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும்.
- குறைந்தது இரண்டு வாரத்துக்கு ஒருமுறை இந்த ஹேர் மாஸ்க் போட்டாலே முடி உதிர்தல் குறைந்து முடி வளர்ச்சியைத் தூண்ட முடியும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.