சுவிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பது எப்படி?: சில பயனுள்ள தகவல்கள்

Switzerland Citizenship
By Balamanuvelan Nov 25, 2021 03:00 PM GMT
Report

சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்த சில பயனுள்ள தகவல்கள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளன.

1. சுவிஸ் குடியுரிமை பெற இரண்டு வழிமுறைகள் உள்ளன

பெரும்பாலானவர்கள் சுவிஸ் குடியுரிமை பெறுவதற்கு பயன்படுத்துவது, சாதாரண அல்லது வழக்கமான குடியுரிமை பெறும் முறைமையாகும். அடுத்ததாக, எளிமையாக்கப்பட்ட குடியுரிமை பெறும் முறைமை என்பது குறுகிய கால, மற்றும் சிக்கல் குறைவான ஒரு முறைமை, அது, சுவிஸ் குடிமக்களின் வெளிநாட்டவர்களான கணவர் அல்லது மனைவி மற்றும் குழந்தைகளுக்கானது, மேலும், 2017 முதல் மூன்றாம் தலைமுறை வெளிநாட்டவர்களுக்கானதும்.

சுவிஸ் நாட்டவர்களின் கணவர் அல்லது மனைவியான வெளிநாட்டவருக்கான எளிமையாக்கப்பட்ட குடியுரிமை பெறும் முறைமையைப் பொருத்தவரை, உங்களுக்குத் திருமணமாகி குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகியிருக்கவேண்டும், மேலும், நீங்கள் குறைந்தது ஐந்தாண்டுகள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்திருக்கவேண்டும்.  

2. குடியுரிமை பெறுவதற்கான தகுதி

வழக்கமான முறையில் குடியுரிமை பெற, ஒரு வெளிநாட்டவர், அரசு விதித்துள்ள மூன்று மட்டங்களிலான விதிமுறைகளுக்கு உட்படவேண்டும். அவையாவன, நகராட்சி, மாகாணம் மற்றும் நாடு.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதி பெடரல் வெளிநாட்டவர்களின் சட்டத்தில் செய்யப்பட்ட மாற்றங்களின்படி, குடியுரிமை கோரி விண்ணப்பிப்பவர், சுவிட்சர்லாந்தில் குறைந்தது 10 ஆண்டுகளாவது வாழ்ந்திருக்கவேண்டும் (முன்பு இது 12 ஆண்டுகளாக இருந்தது). அல்லது பதின்ம வயதிலேயே நீங்கள் சுவிட்சர்லாந்தில் வாழ்ந்தவர்களாக இருந்தாலோ அல்லது சுவிஸ் நிரந்தர வாழிட அனுமதி (C residence permit) வைத்திருப்பவர்களாகவோ இருந்தால், அதற்கும் குறைவான காலம் வாழ்ந்தவர்களாக இருந்தாலும் போதும்.

அவர்கள் சுவிஸ் சட்டம் ஒழுங்குக்கு கீழ்ப்படிகிறவர்களாகவும், அவர்களால் நாட்டுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், அவர்கள் சுவிஸ் மக்களுடன் நன்றாக ஒருங்கிணைந்து வாழ்கிறவர்களாகவும் இருப்பதை காட்டவேண்டும். அதாவது, நீங்கள் சுவிஸ் பொருளாதார, சமூக மற்றும் மொழிசார் விடயங்களில் பங்கெடுப்பவராக இருக்கவேண்டும் என்பது அதன் பொருள்.

ஒருவர் எந்த அளவுக்கு சுவிட்சர்லாந்து மக்களுடன் ஒன்றிணைந்து வாழ்கிறார் என்பதை பெடரல் அதிகாரிகளுக்கு சொல்வது மாகாண மற்றும் நகராட்சி அதிகாரிகளின் வேலையாகும். ஆனால், புதிய பெடரல் சட்டமோ, நீங்கள் மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரும் சுவிட்சர்லாந்துடன் ஒருங்கிணைந்து வாழவேண்டும் என எதிர்பார்க்கிறது.

3. நீங்கள் சமீபகாலத்தில் அரசு உதவி பெற்றவர்களாக இருந்தால், உங்களால் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க முடியாது

2018ஆம் ஆண்டில் மற்றொரு மாற்றமும் கொண்டுவரப்பட்டது. அதாவது, நீங்கள் கடந்த மூன்று ஆண்டுகளில் அரசின் உதவியை பெற்றிருந்தால், (நீங்கள் இதுவரை பெற்ற தொகையை திருப்பிச் செலுத்தினாலொழிய), உங்களால் குடியுரிமை கோரி விண்ணப்பிக்க இயலாது.  

4. நீங்கள் வாழும் மாகாணத்தில் நீங்கள் எவ்வளவு காலமாக வாழ்ந்து வருகிறீர்கள் என்பது மிக முக்கியமான காரணியாகும்

நீங்கள் சுவிட்சர்லாந்தில் பத்து ஆண்டுகள் வரை கூட வாழ்ந்திருக்கலாம். ஆனால், இப்போது வாழும் மாகாணத்தில் எவ்வளவு காலமாக வாழ்ந்து வருகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். மற்றொரு மாகாணத்துக்கோ அல்லது நகராட்சிக்கோ குடிபெயர்ந்து அங்கு நீங்கள் குடியுரிமை கோர முடியாது.

5. நீங்கள் உள்ளூர் மொழியில் பேசுவது கட்டாயம்

சுவிஸ் குடியுரிமை கோர மொழித்திறன் மிகவும் அவசியமாகும். ஆனால், இந்த தகுதியும் மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும்.

6. மாகாண மற்றும் நகராட்சி விதிகள் குறிப்பிடத்தக்க அளவில் வித்தியாசப்படும்

நீங்கள் வாழும் பகுதியில், நீங்கள் அங்குள்ள மக்களுடன் எந்த அளவுக்கு இணைந்து வாழ்கிறீர்கள் என்பதற்கான தகுதித் தேவைகள் மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடும்.

7. உள்ளூர் மக்களும் உங்களுக்காக வாக்களிக்கலாம்

நீங்கள் ஓரிடத்தில் எப்படி ஒருங்கிணைந்து வாழ்கிறீர்கள் என்பதை அறிய நேர்காணல் இருக்கும் அதே நேரத்தில், சில இடங்களில் உள்ளூர் மக்களின் கமிட்டி கூடி உங்கள் விண்ணப்பம் குறித்து வாக்களிக்கவும் நேரலாம்.

8. உங்கள் குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்பட சிறிது காலமாகலாம்

நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் என்பதைப் பொருத்து, உங்கள் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் கால அளவு மாறுபடும். அது சில ஆண்டுகள் கூட ஆகலாம் என்பதை கவனத்தில் கொள்க.

9. குடியுரிமைக்காக உங்களுக்கு செலவு பிடிக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ளவும்

மூன்று மட்டத்தில் அதிகாரிகள் இந்த விடயங்களை அணுகுவதால், மூன்று வகையான கட்டணங்கள் செலுத்தவேண்டியிருக்கும். நாட்டு மட்டத்தில் 50 முதல் 150 சுவிஸ் ஃப்ராங்குகள், மாகாண மற்றும் நகராட்சி கட்டணங்கள் இன்னமும் அதிகமாக இருக்கலாம்.

நகராட்சி மட்டத்தில் 500 முதல் 1,000 ஃப்ராங்குகளும், மாகாண மட்டத்தில் 2,000 ஃப்ராங்குகள் வரையும் விண்ணப்பத்திற்காக கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும்.

10. உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படுவது, நீங்கள் எங்கு வாழ்கிறீர்கள் என்பதைப் பொருத்தும் அமையலாம்

மேற்கு சுவிட்சர்லாந்தில் மற்ற பகுதிகளை விட குடியுரிமை பெறுவது சற்று எளிது என உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.

11. சுவிட்சர்லாந்து, இரட்டைக் குடியுரிமையையும் அனுமதிக்கிறது

சுவிஸ் குடிமக்கள் இரண்டு நாடுகளின் பாஸ்போர்ட்கள் வைத்திருக்க அனுமதியுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.  

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 10

மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
நன்றி நவிலல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், ஒட்டுசுட்டான், கொழும்பு

23 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US