வாய் புண் குணமாக.. இந்த உணவுகளை சாப்பிடுங்க! உடனடி தீர்வை பெறலாம்
வயிற்றில் புண்கள் ஏதேனும் இருந்தால் கூட அதன் பாதிப்பு வாய் புண்களின் மூலமாக வெளிப்படும். அதிகம் நீர் அருந்தாவிட்டாலும், வாயில் புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வாயில் புண் வந்து விட்டால் உணவு எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல் பேசுவது, தண்ணீர் குடிப்பது என்று எல்லாமே கஷ்டம் தான்.
நமது அன்றாட உணவு வகைகளிலேயே இதற்கான வைத்தியங்கள் இருக்கின்றன. வாய் புண் ஒரே நாளில் குணமாக அரை மூடித் தேங்காயை அரைத்து அதிலிருந்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். சிறிது சிறிதாக தேங்காய் பாலை புண் உள்ள இடத்தில் படும் படியாக ருசித்து குடித்து வாருங்கள்.
வீட்டில் தேன் இருந்தால் ஒரு கரண்டி தேங்காய் பாலில் சிறிதளவு தேன் சேர்த்து மிக்ஸ் செய்து வாயில் புண் உள்ள இடத்தில் பூசிவிடுங்கள். ஒரே நாளில் நல்ல பலன் தெரியும். மேலும் வாய் புண் குணமாக சில முக்கிய டிப்ஸ்களை இந்த வீடியோவில் பார்க்கலாம்..