வீட்டில் சமையலறையில் இருக்கும் தக்காளியை வைத்து முகத்தை எவ்வளவு அழகாக்கலாம்ன்னு தெரியுமா?
தினமும் காற்றில் உள்ள மாசுக்கள் உங்களது முகத்தில் படிவதாலும், முகத்தில் எண்ணெய் வடிவது, துசிகள் படிவது, முகப்பருக்கள், சூரிய ஒளி போன்றவை உங்களது முகத்தில் உள்ள பொழிவை குறைக்கின்றன. என்ன தான் கலராக இருந்தாலும் சரி, கருப்பாக இருந்தாலும் சரி முகத்தில் ஒரு பொழிவு இருந்தால் அந்த நாளே உங்களுக்கு புத்துணர்ச்சி மிகுந்த ஒரு நாளாக இருக்கும்.
பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்ற விடும். இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.தக்காளி முகத்தில் சுருக்கம் விழாமல் தடுக்கிறது. மேலும் இது தோல்களை பளபளக்க செய்கிறது.
நீங்கள் தக்காளியை சாப்பிடுகிறீர்கள், ஆனால் அதை எப்போதாவது உங்கள் முகத்தில் பயன்படுத்தியிருக்கிறீர்களா? பயன்படுத்தாவிட்டால், இன்று முதல் அதை முகத்தில் பயன்படுத்தத் தொடங்குங்கள்.
கருமை நிறம் மறைய
பழுத்த தக்காளியை நன்கு பசைப்போல விதையுடன் சேர்த்து அரைத்து, முகத்தில் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறையும்.
தழும்புகள் மறைய
தக்காளி குளிர்ச்சியானது. இதனுடன் வெள்ளரிச்சாறை சம அளவில் எடுத்து பஞ்சில் நனைத்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் கழுவ வேண்டும். தொடர்ந்து செய்து வந்தால், பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் மறையும்.
முகம் பொலிவு பெற
முகம் பொலிவு பெற முகம் பொழிவு இல்லாதவர்கள் ஒரு தக்காளியை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் ஒரு தேக்கரண்டி ரவையை கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முகம் பொலிவு பெறும்.
முகம் தங்கம் போல் மின்ன
ஒரு தக்காளியை எடுத்து கூலாக அரைத்து அதனுடன் இரண்டு கரண்டி தயிர் கலந்து பூசி வர வெயில் நேரத்தில் முகம் தங்கம் போல் மின்னும். இதனை தொடர்ந்து செய்து வர கூடுதல் பலன் கிடைப்பது உறுதி.
சருமத்தையும் மேம்படுத்த
தக்காளியைப் பயன்படுத்துவது குளிர்காலத்தில் வறண்ட சருமம் போன்ற தோல் பிரச்சினைகளைத் தவிர்க்க உதவுகிறது. சருமத்திற்கான தக்காளி நன்மைகள் சூரியனில் இருந்து வெளியேறும் தீங்கு விளைவிக்கும் ஒளியிலிருந்து பாதுகாக்கிறது. நீங்கள் எப்போதும் இளமையாக இருக்க விரும்பினால், தக்காளியை உட்கொள்ளுதல் நல்லது. தக்காளி சாறு ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும், மேலும் இது சருமத்தையும் மேம்படுத்துகிறது.