உங்கள் ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதா! உடனடியாக இதை செய்யுங்கள்
உங்கள் SBI ஏடிஎம் டெபிட் கார்டு தொலைந்து விட்டால் இந்த இரண்டு வழிகளில் சுலபமாக அதை செயலிழக்க வைக்க முடியும்.
வங்கியின் கட்டணமில்லா எண்கள்
ஏடிஎம் கார்டுகள் தொலைந்து விட்டாலோ அல்லது திருடப்பட்டு விட்டாலோ பயத்தில் யாரும் உடனடியாக வங்கிகளுக்கு ஓடிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு வழிமுறைகள் மூலம் சுலபமாக ஏடிஎம் டெபிட் கார்டுகளை செயலிழக்க வைக்க முடியும்.
அதில் முதல் வழி, வங்கியின் கட்டணமில்லா எண்களான 1800 11 2211 அல்லது 1800 425 3800 என்ற எண்களை தொடர்பு கொள்வது.
இந்த கட்டணமில்லா தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அதில் வழங்கப்படும் வழிமுறைகளை பயன்படுத்தி தொலைந்து போன அல்லது திருடப்பட்ட ஏடிஎம் கார்டுகளை செயலிழக்க வைக்க முடியும்.
இணைய சேவைகள் மூலம் பிளாக் செய்யும் முறை
உங்களின் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணைய தளமான onlinesbi.comக்கு சென்று பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லை உள்ளிட்டு இன்டர்நெட் பேங்கிங் போர்டலை தேர்வு செய்யும்.
பின் இ-சேவைகள் பிரிவுக்கு சென்று ஏடிஎம் டெபிட் கார்டு பிரிவை தேர்வு செய்யவும், அதனை தொடர்ந்து ஏடிஎம் டெபிட் கார்டு பிளாக் வசதியை தேர்வு செய்து, தொலைந்து போன அல்லது திருடப்பட்ட ஏடிஎம் கார்டின் கணக்கை தேர்வு செய்யவும்.
பிறகு, ஏடிஎம் கார்டை பிளாக் செய்வதற்கான காரணத்தை தெரிவித்து சேவையை உறுதிப்படுத்தவும். பின் ஏடிஎம் டெபிட் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்ணிற்கு வந்த OTP எண்ணை உறுதிப்படுத்தவும்.
SBI ஏடிஎம் பிளாக் செய்யப்பட்டவுடன் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் டிக்கெட் எண் கிடைக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |