IPL 2024 Ticket: ஐபிஎல் போட்டிகளின் டிக்கெட்டுகளை Online-ல் Book செய்வது எப்படி?
IPL 2024-ன் முதல் போட்டி மார்ச் 22-ம் திகதி தொடங்குகிறது.
இந்த லீக்கின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், விராட் கோலியின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
இந்த போட்டி சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
2024-ன் IPL தொடரின் முதல் 21 போட்டிகளின் அட்டவணை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. இந்த போட்டிகள் 10 மைதானங்களில் 17 நாட்கள் நடைபெறவுள்ளன.
The wait is over ?
— IndianPremierLeague (@IPL) February 22, 2024
???????? for the first 2⃣1⃣ matches of #TATAIPL 2024 is out!
Which fixture are you looking forward to the most ? pic.twitter.com/HFIyVUZFbo
மார்ச் 22 முதல் ஏப்ரல் 7 வரை போட்டிகள் நடைபெறும்.
மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு மீதமுள்ள IPL 2024-ன் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை அறிவிக்கப்படும்.
எனினும் இறுதிபோட்டி மே மாதம் 26-ம் திகதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் முடிந்த அடுத்த 4 நாட்களில் T20 உலக கோப்பை தொடர் தொடங்க உள்ளது.
இந்நிலையில் IPL 2024 போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை Online-ல் எப்படி வாங்குவது என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
இந்தியன் பிரீமியம் லீக் டிக்கெட்
இந்தியன் பிரீமியர் லீக் மார்ச் 22-ம் திகதி தொடங்க உள்ள நிலையில், மார்ச் முதல் வாரத்தில் இருந்து டிக்கெட் விற்பனை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் IPL 2024 டிக்கெட் விற்பனை குறித்து இன்னும் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.
கடந்த ஆண்டை போலவே ரசிகர்கள் IPL Website அல்லது BookMyShow தளங்களில் Book செய்து கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுவாக, டிக்கெட்டின் விலை சில ஆயிரங்கள் முதல் லட்சங்கள் வரை இருக்கும். ரசிகர்கள் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு டிக்கெட்டுகளை Book செய்து கொள்ளலாம்.
மேலும், IPL போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையை அந்த அந்த அணி நிர்வாகம் ஏற்றுக்கொள்கிறது.
அவர்கள் தான் எவ்வளவு டிக்கெட்கள் விற்க வேண்டும், எவ்வளவு விலைக்கு விற்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |