இதை சாப்பிட்டால் 20 ஆண்டுகள் ஆயுள் அதிகரிக்கும்
”உணவே மருந்து” என்ற பழமொழியோடு இணைந்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.
ஒவ்வொரு காலநிலைக்கும் ஏற்றவாறு உணவுகளை தயாரித்து அதன் மூலமே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கிருமித்தொற்றுகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.
ஆனால் இன்றோ நாம் துரித உணவுகள், ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் என நோய்களை நாமே வரவழைத்துக் கொள்கிறோம்.
இந்த பதிவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிமுறைகளும் அதற்காக நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்தும் தெரிந்து கொள்வோம்.
அதிகாலையில் எழுந்தவுடன் காபி, டீக்கு பதிலாக மஞ்சள் மற்றும் இஞ்சி கலந்த பானங்களை எடுத்துக்கொள்ளலாம், இந்த பானங்கள் புத்துணர்ச்சி அளிப்பதுடன் உடலை நோய்த் தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.
அடுத்ததாக காலை உணவை தவறாமல் சாப்பிட்டு பழகுங்கள், இட்லியுடன் சேர்த்து கருப்பு கொண்டைக்கடலையையும் எடுத்துக்கொள்வது புரதத்தின் ஆதாரமாகும், சட்னியின் தாளிக்க பயன்படுத்தும் கருவேப்பிலையை அப்படியே எடுத்து சாப்பிடவும்.
மிக முக்கியமாக விட்டமின் சி நிறைந்த பழங்களை கட்டாயம் எடுத்துக்கொள்ளவும், வாரத்திற்கு மூன்றுமுறையாவது முருங்கை கீரை பயன்படுத்துவது நன்மையை தரும், இதிலுள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மதிய உணவில் மிளகு ரசம் எடுத்துக்கொள்ளுங்கள், இஞ்சி, கருவேப்பிலை கலந்த மோர் ஒரு டம்ளர் அருந்தலாம், இது செரிமானத்தை சீராக்குவதுடன் நல்ல பக்டீரியாக்களை ஊக்குவிக்கிறது.
வாரத்திற்கு ஒருமுறையாவது வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள், அத்துடன் எண்ணற்ற பலன்கள் கொண்ட பெரிய நெல்லிக்காயையும் சாப்பிட்டு வரவும்.
மாலை வேளையில் டீக்கு பதிலாக ஹெர்பல் டீயாக அருந்தவும், பட்டை தேநீர், இஞ்சி தேநீர், லெமன் தேநீர் என தினந்தோறும் ஒருவகையான தேநீரை தயாரித்து பருகலாம்.
மிக முக்கியமாக வாரத்திற்கு மூன்றுமுறையாவது கீரையை கட்டாயம் உணவில் சேர்க்கவும், பருப்பு கீரை கூட்டு, கீரை பொரியல் ஆரோக்கியமான வாழ்விற்கு இன்றியமையாத ஒன்று.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |