Google Pay மூலம் Digital Gold வாங்குவது எப்படி?
Google Pay மூலம் டிஜிட்டல் கோல்டு எப்படி வாங்கலாம் என்பது பற்றியும், அதை பற்றிய முழு விவரத்தையும் இந்த பதிவில் பார்க்கலாம்.
டிஜிட்டல் கோல்டு
பொதுவாக இந்தியர்கள் தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் தங்கத்தை வாங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால், இந்த பழக்கம் மாறி தற்போது டிஜிட்டல் கோல்டு வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
Istock
இதை வாங்குவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், டிஜிட்டல் கோல்டை வாங்குவதற்கும், விற்பதற்கும் தங்க நகையை காட்டிலும் எளிதாக இருக்கிறது. டிஜிட்டல் கோல்டு என்பது எளிமையான முறையில் ஒன்லைனில் தங்கம் வாங்குவதாகும்.
உண்மையான தங்கத்தின் அதே எடை செல்லரின் பாதுகாக்கப்பட்ட வால்டில் ஆன்லைன் பரிமாற்றத்தின் போது சேமிக்கப்படுகிறது. இந்த டிஜிட்டல் கோல்டை நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும், எந்த விதமான டினாமினேஷனிலும் பெறலாம்.
தகுதியானவர்கள் யார்?
இந்தியாவில் வசிக்கும் எந்த ஒரு தனிநபரும் டிஜிட்டல் கோல்டு வாங்குவதற்கு தகுதியானவர்கள். இதனை வாங்குவதற்கு சேவிங்ஸ் அக்கவுண்ட் (Savings Account) அல்லது கரண்ட் அக்கவுண்ட் (Current Account ) வைத்திருக்க வேண்டும்.
தகுதியற்றவர்கள் யார்?
மைனர் அக்கவுண்ட் ஹோல்டர் (Minor Account) மற்றும் NRO அக்கவுண்ட் இல்லாத NRI Customer இந்தியாவில் டிஜிட்டல் கோல்டை வாங்க முடியாது.
Google Pay -ல் வாங்குவது எப்படி?
* Google Pay அப்ளிகேஷனை திறந்து நியூ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின், சர்ச் (Search) பாரில் ‘கோல்டு லாக்கர்’ என்பதை Type செய்ய வேண்டும்.
*கோல்டு லாக்கர் என்பதை கிளிக் செய்து ‘Buy’ என்பதை கிளிக் செய்யுங்கள்
* வரிகள் உட்பட தங்கத்தின் தற்போதைய மார்க்கெட் விலையை Google Pay உங்களுக்கு காண்பிக்கும்.
*அப்போது நீங்கள் தங்கம் வாங்கும் செயல்முறையை தொடங்கியவுடன் அடுத்த 5 நிமிடத்திற்கு விலை லாக் செய்யப்படும். ஏனென்றால் நாள் முழுவதும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டே இருக்கும்.
*பின் INR -ல் தங்கம் வாங்கும் அளவை Enter செய்யுங்கள். தொடர்ந்து செக்மார்க்கை கிளிக் செய்து விருப்பமான பேமெண்ட் முறையை தேர்ந்தெடுத்து பணத்தை செலுத்த வேண்டும்.
* Transaction நிறைவு செய்ததும் ஒரு சில நிமிடங்களில் தங்கம் உங்களது லாக்கரில் காண்பிக்கப்படும்.
*Order Process ஆன பிறகு Cancel செய்ய முடியாது. தற்போதைய மார்க்கெட் விலையில் வேண்டுமானால் அதனை விற்று விடலாம். எனினும், உங்களுடைய கோல்டு ட்ரான்ஸ்ஷாக்ஷன் பேமெண்ட் நிறைவு பெறாவிட்டால் உங்களது பணம் மூன்று வேலை நாட்களுக்குள் திருப்பி தரப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |