கண்ணாடி போத்தலை சுத்தம் செய்ய இந்த ஒரு டிப்ஸ் போதும்
பொதுவாகவே கண்ணாடி போத்தல் என்றாலே அழகாக இருக்கும். ஆனால் அவற்றை சுத்தம் செய்வது ஒரு கடினமான பணியாக இருக்கும்.
கண்ணாடி போத்தலை மீண்டும் பயன்படுத்த விரும்பினால், கண்ணாடி போத்தலை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.
எவ்வாறு கண்ணாடி போத்தலை சுத்தப்படுத்தலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
கொதிக்கும் நீர்
ஒரு அகலமான பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
அடுத்து கண்ணாடி போத்தல்களை கொதிக்கும் நீரில் வைக்கவும்.
வினிகர்
கண்ணாடி பாட்டிலின் 3/4 வது பகுதியை வினிகர் சேர்த்து நிரப்பவும். மீதமுள்ள பகுதியில் சூடான நீரை சேர்க்கவும்.
அதை 10 நிமிடங்கள் ஊற வைத்து சுத்தமான தண்ணீரில் கழுவவும்.
அரிசி நீர்
கண்ணாடி போத்தலில் கால் கப் அரிசி சேர்த்து, அதில் ஒரு டீஸ்பூன் தண்ணீர் ஊற்றி, போத்தல் மூடியை மூடி 20 முதல் 30 விநாடிகளுக்கு குழுக்க வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |