7 நாட்களில் குடலை சுத்தம் செய்யலாம்! மறக்காம இதை செய்திடுங்க
நாம் நமது உடலை எப்போதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் விரும்புகின்றோம்.
உடல் ஆரோக்கியம் என்றாலே குடலும் அதில் ஒரு உறுப்பாகும்.
தேவையான ஊட்டச்சத்துகளை எடுத்துக்கொள்வது குடல் தான்.
ஆனாலும் அதிகப்படிான கெட்ட கொழுப்பை சேர்த்து சேர்த்து உடல் பருமன், குடல் ஆரோக்கியம் தவறான முறையில் செல்வதற்கும் இது தான் பங்களிக்கின்றது எனலாம்.
ஆகவே குடலில் பலவிதமான நச்சுதன்மை காணப்படுகின்றது. அதை எவ்வாறு வீட்டில் இருந்துக்கொண்டே எப்படி இலகுவாக தடுக்கலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
தண்ணீர்
நமது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதில் முதலில் பங்களிப்பது தண்ணீர் தான். ஆகவே காலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவதை நாங்கள் கேட்டுள்ளோம்.
ஆகவே தண்ணீரை வைத்து எப்படி குடலை சுத்தம் செய்யாலம் என பார்ப்போம்.
தண்ணீருடன் சற்று தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை ஒரு நாளிற்கு 8 முதல் 10 கிளாஸ் வரை குடித்தால் நல்லது.
ஆப்பிள் ஜூஸ்
சில மருத்துவர்கள் உடலிற்கு ஆப்பிள் சாப்பிடுவது நல்லது என்று கூறுவார்கள். ஆப்பிளில் பொதுவாகவே குடலை சுத்தப்படுத்தும் நார்ச்சத்துகள் அதிகமாகவே காணப்படுகின்றது.
ஒரு ஆப்பிளை எடுத்து நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுத்து குடியுங்கள்.
பின் 30 நிமிடங்கள் கழித்து வெறும் தண்ணீர் மட்டும் குடியுங்கள். இவ்வாறு ஒரு நாளைக்கு 2 தொக்கம் 3 முறை எடுத்துக்கொள்வது நல்லது.
எழுமிச்சை ஜூஸ்
எழுமிச்சையில் அதிகமாக விட்டமின் நிறைந்துள்ளது. இது குடலை வேகமாக சுத்தமாக வைத்திருக்க உதவும்.
ஆகவே எழுமிச்சை சாற்றுடன் தேன் மற்றும் உப்பு சேர்த்து சூடான நீரில் கலந்து தினமும் காலையில் குடிக்கலாம்.
இதை தினமும் ஒரு நாளைக்கு 2 தொடக்கம் 3 முறை குடித்து வரலாம்.
இஞ்சி சாறு மற்றும் யோகார்ட்
இஞ்சி சாறு வயிறு வீக்கம் போன்றவற்றை குறைக்கும். இஞ்சியின் தோல் நீக்கி அதை சாறு எடுத்து தேன் கலந்து குடிக்க வேண்டும்.
இதை ஒரு நாளைக்கு 2 தொடக்கம் 3 முறை குடித்தால் குடல் வேகமாக சுத்தமாகிவிடும்.
ஆளி விதைகள்
ஆளி விதைகளில்,ஓமேகா கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் உள்ளன. ஆளி விதைகளை பொடி செய்து 1 டேபிள் ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும்.
இதை தினமும் காலை மற்றும் இரவு உணவிற்கு 30 நிமிடங்களுக்கு முன் 2 முறையும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
திரிபலா மற்றும் கடல் உப்பு
திரிபலா என்பது மூன்று விதமான பழங்களை உள்ளடக்கியது. இதில் விட்டமின் சி அதிகமாக காணப்படுகின்றது எனலாம்.
ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைத்து சிறுதளவு உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு குளிர்ந்த பிறகு குடிக்க வேண்டும்.
இறுதியாக குடித்தவுடன் வயிற்றை கீழ்நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.
ஆவாரம் பூ
இந்த தாவரத்தில் உள்ள ஆன்ட்ராயுகின்கள் என்ற பொருள் குடல் தூண்டுதலை ஏற்படுத்துகிறது. கொதிக்கின்ற நீரில் இந்த மூலிகையை சேர்த்து 10 நிமிடங்கள் கழித்து வடிகட்டி குடிக்க வேண்டும்.