சிறுநீரகங்களின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்கை வெளியேற்றனுமா?
சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் சிறுநீரகங்கள் தான் உடலில் இருந்து கழிவுகளை வடிகட்டும் முக்கிய செயல்பாடுகளை செய்கின்றது.
இச்செயல் சரியாக நடைபெறாவிட்டால், இது உடலில் நோய்கள் மற்றும் கோளாறுகளுக்கு வழிவகுக்கும்.
எனவே இவற்றை ஆரோக்கியமாக வைத்து கொள்ள இயற்கை பானங்களை அறிந்துவது சிறப்பானதாகும். தற்போது அவை என்ன என்பதை பார்ப்போம்.
பீட்ரூட் ஜூஸ் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற, குறிப்பாக சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவுகிறது. பீட்ரூட்டில் உள்ள பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், சிறுநீரகங்களை திறம்பட சுத்தம் செய்யவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவி புரிந்து, சிறுநீரகங்களை ஆரோக்கியமாக செயல்பட உதவும்.
இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமான அளவில் உள்ளதால், இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. எனவே வாரத்திற்கு ஒருமுறை சேர்த்து கொள்ளுங்கள்.
சிறுநீரக பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க விரும்பினால், இளநீரை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இதில் வைட்டமின்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இளநீரைக் குடிக்கும் போது, அதன் நீரை மட்டுமே குடிக்க வேண்டும். அதன் சதைப் பகுதியில் சோடியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரகங்களுக்கு ஆரோக்கியமானது அல்ல.
ஆப்பிள் சீடர் வினிகர் சிறுநீரகங்களில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ப்ரீ-ராடிக்கல்களின் நடவடிக்கையைக் குறைத்து, சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. அதற்கு ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.