அடிக்கடி பசித்தால் இந்த நோய் இருக்குதாம்!
பொதுவாகவெ சாப்பாடு என்று வரும் பொழுது மனிதர்களை இரண்டு வகைகளாக பிரித்துக்கொள்ளலாம். ஒன்று பசிக்காக சாப்பிடுவார்கள் மற்றவர்கள் ருசிக்கு சாப்பிடுவார்கள்.
வாழ்வதற்கு தான் உணவு என்று கூறும் காலம் போய் இப்போது சாப்பிடுவதற்கு தான் வாழ்வு என்ற காலம் வந்துவிட்டது.
பொதுவாகவே சாப்பாட்டு பிரியர்களாக இருப்பவர்கள் எங்கு என்ன உணவு இருக்கும் என்று நன்கு அறிந்துவைத்திருப்பார்கள்.
மேலும் எங்கேயாவது சாப்பாட்டின் படமோ அல்லது மணமோ தெரிந்துவிட்டால் உடனே பசியெடுக்கும். அந்த பசியானது உடம்பில் இருக்கும் இன்சுலின் அளவை அதிகரிக்கும்.
இன்சுலின் ஒழுங்காக சுரக்கவில்லை என்றால், பசியெடுப்பது அதிகரிக்கும். அதனால் தான் நீரிழிவு நோய் இருப்பவர்களை வாயை கட்டுப்படுத்த சொல்லுவார்கள்.
திடீரென்று உங்களுக்கு பசியெடுக்க ஆரம்பித்து விட்டால் அதை எப்படி கட்டுப்படுத்துவது என்று யோசித்துக்கொண்டு இருக்கின்றீர்களா? அதற்கு சிறந்த ஓர் தீர்வை பார்க்கலாம்.
பசியெடுத்தால் தண்ணீரை குடித்துக்கொள்ளுங்கள். அதாவது சூடான தண்ணீரை குடித்தாலும் நல்லது. பசியெடுக்கும் நேரம் எல்லாம் தண்ணீரை குடித்துக்கொள்ளுங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |