வறுத்து அரைத்த கோழிக்குழம்பு செய்வது எப்படி?
Healthy Food Recipes
By Kirthiga
சிக்கன் என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாகும்.
அதிலும் அதை கறி வைத்து சாப்பிடுவது என்றால் பிரியர்கள் அதிகம் தான்.
ஆகவே தினமும் செய்து சாப்பிடுவது போலின்றி இனி வித்தியாசமாக எப்படி செய்து சாப்பிடலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
-
கோழி இறைச்சி - 01 கிலோ
- சின்ன வெங்காயம் - 30
-
தக்காளி - 04
- பச்சை மிளகாய் - 02
-
இஞ்சி பூண்டு விழுது - 02
-
உருளைக்கிழங்கு - 01
- உப்பு
- கறிவேப்பிலை
- தேங்காய் எண்ணெய்
தாளிப்பதற்கு
-
சோம்பு - 2 தே.கரண்டி
- சீரகம் - 1 தே.கரண்டி
- பிரியாணி இலை - 1
- ஏலக்காய் - 5
- கிராம்பு - 5
- பட்டை - 1
வறுத்து அரைப்பதற்கு
-
வரமிளகாய் - 10-12
-
மல்லி விதைகள் - 4 தே.கரண்டி
- சீரகம் - 2 தே.கரண்டி
- மிளகு - 2 தே.கரண்டி
- கறிவேப்பிலை
அரைப்பதற்கு
-
துருவிய தேங்காய் - 1 கப்
-
பொட்டுக்கடலை - 1 தே.கரண்டி
- சோம்பு - 1 தே.கரண்டி
செய்முறை
-
தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை வெட்டிக் கொள்ள வேண்டும்.
-
ஒரு பாத்திரத்தில் வறுப்பதற்கான பொருட்களைக் கொண்டு வறுத்தெடுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
-
பின்னர் தேங்காய், சோம்பு மற்றும் பொட்டுக்கடலை சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
-
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்க வேண்டும்.
-
பிறகு தக்காளி மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அதில் சிக்கனை கழுவிப் போட்டு, 5-6 நிமிடம் சிக்கனை வதக்கி எடுக்க வேண்டும்.
-
பின்னர் அதனுடன் அரைத்த மசாலா சேர்த்து அடுப்பில் வைத்து 2 விசில் விடும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
- பின்னர் உருளைக்கிழங்கு மற்றும் அரைத்த தேங்காய் மசாலா சேர்த்து அடுப்பில் வைத்து 10-15 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கினால் சுவையான வறுத்து அரைத்த சிக்கன் குழம்பு தயார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US