Instant Rasmalai: 5 துண்டு பிரட் இருந்தால் போதும்.., தித்திக்கும் ரசமலாய் செய்யலாம்
பொதுவாக இனிப்பு வகையான ரசமலாயை பாலாடை வைத்து தான் செய்வார்கள். இது சாப்பிடவே மிகவும் சுவையாக இருக்கும்.
ஆனால் அதே சுவையில் இருக்கும் இந்த இன்ஸ்டன்ட் ரசமலாய் பிரட் துண்டுகளை வைத்த செய்யப்படுவதாகும்.
அந்தவகையில், அட்டகாசமான சுவையில் தித்திக்கும் பிரட் ரசமலாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பிரட்- 5 துண்டு
- பால்- 1 லிட்டர்
- முந்திரி- 20
- சர்க்கரை- 6 ஸ்பூன்
- குங்குமப்பூ- 5 இதழ்
- ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன்
- நெய்- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் பால் சேர்த்து பாதியாக சுண்டி வரும்வரை கொதிக்கவைக்கவும்.
பின் அதில் ஒரு 10 முந்திரி பருப்பை மிக்ஸியில் பொடித்து அதனை பாலில் சேர்க்கவும்.
அடுத்து இதில் 10 முந்திரி பருப்பை நறுக்கி சேர்க்கவும். இதனைத்தொடர்ந்து இதில் ஏலக்காய் தூள், சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து கொதித்தவுடன் அடுப்பை அனைத்து இறக்கவும்.
பின் பிரட்களை சிறிய வட்ட மூடிக்கொண்டு சின்ன சின்னதாக வட்ட வடிவத்திற்கு நறுக்கி எடுக்கவும்.
அடுத்து ஒரு தவாவை அடுப்பி வைத்து அதில் நெய் சேர்த்து அதில் வட்டமாக வெட்டிய பிரட் துண்டுகளை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இறுதியாக ஒரு பவுலில் செய்து வைத்த பால் கீர் சேர்த்து அதில் பிரட் துண்டுகளை சேர்த்து சாப்பிட்டால் சுவையான இன்ஸ்டன்ட் பிரட் ரசமலாய் தயார்.
குறிப்பு: பிரட் துண்டுகளை அதிக நேரம் பாலில் ஊறவைக்கவேண்டிய அவசியம் கிடையாது. சாப்பிடும்பொழுது பால் கீர்ரில் பிரட் துண்டுகளை சேர்த்தால் போதும். அதிக நேரம் ஊறினால் பிரட் துண்டுகள் குழைந்த போய்விடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |