வறட்டு இருமல் பிரச்னையா? இந்த பொருள் இருந்தால் போதும்.. வீட்டிலேயே உடனடி தீர்வு
சில குழந்தைகளுக்கு பனிக்காலம் வந்தாலே வறட்டு இருமல், சளி பிரச்சனை ஆகியவை பாடாய் படுத்திவிடும். அதன் காரணமாக தாய்மார்கள் குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதும் ஆவி பிடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
ஆனால் இதையெல்லாம் விட குழந்தைகளின் சளி பிரச்சனையை இயற்கை முறையிலேயே தீர்த்து விட முடியும். அதை எப்படி தீர்க்கலாம் என்று தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருள்கள்:-
தேன்
தேங்காய் எண்ணெய்
எலுமிச்சை சாறு
தண்ணீர்
தயாரிக்கும் முறை:-
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் எடுத்து கொண்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அதன் பிறகு அதில் தேன், தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின்னர் 3நிமிடங்கள் குளிரவிட்டு குடித்தால் வறட்டு இருமலில் இருந்து உடனடி தீர்வை பெறலாம்.