பாதவெடிப்பால் அவஸ்தைப்படுறீங்களா? இதனை போக்க இதோ சூப்பரான டிப்ஸ்
பொதுவாக நம்மில் பலர் அடிக்கடி பாதவெடிப்பால் அவஸ்தைப்படுவதுண்டு.
பாதங்களில் வெடிப்பு ஏற்பட பல காரணங்கள் உள்ளது. சிலருக்கு மிதமாக இருக்கும் . சிலருக்கு வெடிப்பு தீவிரமானதாக இருக்கும்.
உடலின் இயற்கை தன்மை, உணவுமுறை, பணி என ஒவ்வொன்றும் மாறுபடலாம்.
இவற்றை ஆரம்பத்திலே எளியமுறையில் போக்குவதே நல்லது. அந்தவகையில் குதிகால் வெடிப்பை எப்படி இலகுவில் இருந்து விடுபடலாம் என்று பார்ப்போம்.
தேவை
- அரிசி மாவு - 4 டீஸ்பூன்
- தேன் - 1 டீஸ்பூன்
- ஆப்பிள் சீடர் வினிகர் - கால் டீஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
அரிசி மாவு, தேன்,ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து பேஸ்ட் போல தயர் செய்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு வெடிப்பு மிக அதிகமாக இருந்தால் ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வெந்நீரில் கால்களை 10 நிமிடம் வைத்து பிறகு இந்த பேஸ்ட்டை வைத்து நன்றாக மென்மையாக ஸ்க்ரப் செய்யுங்கள்.
தினமும் நேரம் கிடைக்கும் போது இதை செய்யுங்கள். நாளடைவில் படிப்படியாக பாத வெடிப்பு சரியாகும்.