ஒரே இரவில் உங்கள் முகம் ஜொலிக்க வேண்டுமா? அப்போ தூங்கும் முன் இதை செய்யுங்க போதும்!
Beauty
BeautyTips
Leomon
By Logeswari
அழகு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அனைவருக்கும் முகம் வெண்மையில் ஜொலிக்க வேண்டுமென்றே ஆசை. ஆனால் மாசடைந்த சூழல் மற்றும் ஆரோக்கியமற்ற உணவால் உடல் மற்றும் சரும ஆரோக்கியம் பாழாகிறது.
இதனால் உண்டாகும் முகப்பரு, கரும்புள்ளிகளை தவிர்க்க கெமிக்கல் நிறைந்த அழகு பொருளை பயன்படுத்துவதால் சருமம் இளமையிலே முதுமையடைந்தது போல் தோற்றமளிக்கும். கவலை வேண்டாம்..
நமது இயற்கை முறையிலே முகம் ஜொலிக்க சில வழிமுறைகளை பார்க்கலாம்.
இரவு துங்கும் முன் செய்ய வேண்டியவை:-
- முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் முகப்பருக்கள் வராது.
- மஞ்சள் நமது சருமத்திற்கு மிகவும் நல்லது. மஞ்சள் தூளுடன் தயிர் அல்லது தண்ணீர் சேர்த்து முகத்தில் மாஸ்க் வடிவத்தில் போட வேண்டும். 15-20 நிமிடம் உலர்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகளை முழுவதுமாக நீக்கி முகம் வெள்ளையாக்க உதவும்.
- எலுமிச்சை பழத்தில் கிருமிகளை அழிக்கும் சக்தி உள்ளதால் முகத்தில் உள்ள தேவையான அழுக்குகளை போக்க உதவுகிறது. 4-5 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து முகத்தில் 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
- வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் உள்ளது. இதனால் இதற்கு பிம்பிளை அழிக்க அதிக சக்தி உள்ளது. சிறிதளவு வேப்பிலை பொடி, ரோஸ் வாட்டர், தயிர், எலுமிச்சை சாறு, தேன், க்ரீன் டீ இவற்றில் ஏதேனும் ஒன்றை சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US