முகத்தில் அசிங்கமாக தெரியும் வடுக்களை எப்படி குணப்படுத்தலாம்?
பொதுவாக பருக்கள் பெரும்பாலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. எண்ணெய் சருமம் இருப்பவர்கள், தூசியில் அதிகம் இருப்பவர்கள், கொழுப்பு உணவுகளை அதிகம் எடுத்து கொள்வதாலும் பருக்கள் தோன்றுகிறது.
இது உங்கள் சருமத்தில் மாற்றத்தை உண்டாக்குகிறது. இந்த பருக்களை நீங்கள் என்னத்தான் க்ரீம்கள் பயன்படுத்தி சரி செய்தாலும், அதன் வடுக்கள் உங்கள் முகத்தில் ஒரு அடையாளத்தை விட்டுச்செல்லும். இந்த வடுக்கள் முகத்தில் பார்க்கவே மிகவும் அசிங்கமாக காணப்படும்.
இதனை போக்க விலையுரந்த பொருட்களை தான் வாங்கி போட வேண்டும் என்ற அவசியமில்லை.
சில வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே வடுக்களை விரைவாக மறையச்செய்துவிடலாம். தற்போது அவை எப்படி என பார்ப்போம்.
- தேங்காய் எண்ணெய் சருமம் சார்ந்த பல பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் நிவாரணம் தரும். அம்மை நோய் பாதிப்பால் ஏற்படும் வடுக்கள் மீது தேங்காய் எண்ணெய்யை தடவலாம். தேங்காய் எண்ணெய் சரும வறட்சியை போக்கி ஈரப்பதத்தை தக்கவைக்கவும் உதவும்.
- கற்றாழை ஜெல்லை உபயோகிக்கலாம். கற்றாழை ஜெல்லுடன் அதே அளவு ஆலிவ் எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ எண்ணெய்யை கலந்து வடுக்கள் மீது தடவி வரலாம். தொடர்ந்து செய்துவந்தால் வடுக்கள் மறையத்தொடங்கிவிடும்.
- அகன்ற பாத்திரத்தில் 5 சொட்டு எலுமிச்சை சாறு, 5 சொட்டு டீ-ட்ரீ ஆயில், 5 சொட்டு ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் 10 சொட்டு ஜோஜோபா எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து வடுக்கள் மீது தடவலாம். மென்மையான சருமம் என்றால் அதனுடன் தேங்காய் எண்ணெய்யும் சேர்த்துக்கொள்ளலாம். இந்த எண்ணெய் தடவிய பிறகு சூரிய ஒளிபடும்படி வெளியே செல்லக்கூடாது.
- தேன் கொலோஜனை அதிகரிக்கும் பண்புகளை கொண்டுள்ளது. தேனை நேரடியாக வடுக்கள் மீது தடவலாம். உலர்ந்ததும் அரை மணி நேரம் கழித்து சருமத்தை நீரில் கழுவிவிடலாம்.