உங்களுக்கு வெள்ளத்திட்டு பிரச்னையா? கவலையை விடுங்க.. இந்த வீட்டு மருத்துவத்தை உடனே ட்ரை பண்ணுங்க
முகத்தில் கண்கள், மூக்கு, வாயின் ஓரங்களில் ஆங்காங்கே தெரியும் வெள்ளை திட்டுகள் தேமல் என்கிறோம். வெள்ளை வெகு சிலருக்கு தட்டையாக சருமத்தின் மீது வெண்மையாக தெரிவது தான் தேமல் என்கிறோம். இந்த பாதிப்பு மேன சீஸியா என்னும் பங்கஸ் கிருமியால் வருகிறது.
பலரும் இது அழகு தேமல் என்று சொல்வதுண்டு. ஆனால் இது ஒருவித சரும பராமரிப்பு குறைபாட்டினால் வருவது ஆகும். முகத்தில் காணப்படும் தேமல்கள் உடலிலும் கைவிரல்கள், இடுக்கு, கழுத்து, மார்பு கூட்டுக்கு மேல், தோள்பட்டை, தொடை இடுக்கும் பகுதியிலும் இருக்கும்.
வளரும் குழந்தைகள் முதல் வளர்ந்த பெரியவர்கள் வரை அனைவருக்குமே இது வருவதுண்டு. ஆரம்பத்தில் இதை பெரும்பாலும் கவனிப்பதில்லை.
வியர்வை, வெப்பம் அதிகமாகும் போது இவை வேகமாக வளரும். எண்ணெய் பசை அதிகம் இருக்கும் சருமத்தில் இவை அதிகம் இருக்கும். இதற்கு உணவே எண்ணெய் தான். இது ஏன் வருகிறது? இதை எப்படி போக்குவது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்..