வாட்ஸ் அப் கணக்கை நிரந்தரமாக நீக்குவது எப்படி தெரியுமா?
சமூகவலைதள பயன்பாடுகளில் பிரதான ஒன்றாக இருப்பது வாட்ஸ்ஆப். வாட்ஸ்அப் தங்களது வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.
பல்வேறு தேவைகளுக்கு வாட்ஸ்ஆப் பயன்பாடு என்பது பிரதானமாக இருந்து வருகிறது. இருப்பினும் சிலர் இது பாதுகாப்பின்மை இன்றி இதிலிருந்து விலகி டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிக்கு மாறி வருகின்றனர்.
இதுபோன்ற சமயங்களில் வாட்ஸ் அப் கணக்ககை நிரந்தரமாக நீக்குவது அவசியமானதாகும்.
அதிலும் வாட்ஸ்அப் கணக்கை நீக்க விரும்பினால் பல வாய்ப்புகள் உள்ளது. தற்காலிமாக செயலிழக்க செய்யலாம் அல்லது அதை நிரந்திரமாக நீக்குவதற்கான வழிமுறைகளும் உள்ளது.
அந்தவகையில் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை நிரந்தரமாக நீக்க விரும்பினால் கீழே வழிமுறைகள் பின்பற்றவும்.
- வாட்ஸ்அப்பை ஓபன் செய்து கொள்ளவும். செட்டிங்ஸ் பயன்பாட்டுக்குள் சென்று கணக்கு தேர்வை கிளிக் செய்து எனது கணக்கு நீக்கு என்ற தேர்வை தேர்ந்தெடுக்க வேண்டும்.
- சர்வதேச வடிவத்தில் தங்கள் மொபைல் எண்ணை சேர்க்கவும் (அதாவது +91 உடன்). எனது கணக்கை நீக்கு என்று விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.
- அதன்பின் உங்கள் கணக்கை நீக்கு என்ற வார்த்தையுடன் அதற்கான காரணம் காண்பிக்கப்படும். அதில் ஏதாவது ஒரு காரணத்தை தேர்ந்தெடுக்கவும்.
- அதன்பின் எனது கணக்கை நீக்கு என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.