டோனியை டக் அவுட் ஆக்கி வெளியேற்றியது எப்படி? ரிஷப் பாண்ட் சொன்ன ரகசியத்தை உடைத்த ஆவேஷ்கான்
சென்னை அணியின் கேப்டன் ஆன, டோனியை டக் அவுட் ஆக்கியது குறித்து டெல்லி அணியில் விளையாடிய ஆவேஷ்கான் முதன் முறையாக கூறியுள்ளார்.
இந்தியாவில் இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர்களில் ஆவேஷ்கானும் ஒருவர்.
இதுவரை ஐபிஎல் தொடரில் 8 போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
இந்நிலையில், சென்னை அணிக்கெதிரான போட்டியில், டோனியை வந்தவுடன் அவுட் ஆக்கியது எப்படி என்பது குறித்து ஆவேஷ்கான் கூறியுள்ளார். அதில், ஆட்டத்தின் சில ஓவர்கள் மட்டுமே அப்போது மீதமிருந்ததால், டோனி வந்தவுடன், அடித்து ஆடுவார் என்று கேப்டன் ரிஷப் பாண்ட் நினைத்தார்.
இதனால் அவர் உடனடியாக என்னிடம் வந்து நீ பந்தை ஷாட் பாலாக போடு என்று சொல்லிவிட்டு சென்றார்.
நானும் அதையே செய்தேன். அவர் கூறியது போலவே டோனி அடுத்த அடித்து ஆட முயன்று இன்சைட் எட்ஜ் ஆகி அவுட் ஆனார் என்று கூறியுள்ளார்.