சேலை கட்டினால் ஒல்லியாக தெரியனுமா? அப்போ இப்படி செய்ங்க
புடவை என்றாலே பெண்களுக்கு ஒரு மோகம் இருக்கும்.
என்ன தான் இன்றைய காலத்தில் மாடர்ன் ஆடைகள் அணிந்தாலும், புடவை என்றால் முகத்தில் வெக்கத்தோடு அதை விரும்பி அணிந்துக்கொள்வது வழக்கம்.
ஒரு பெண் புடவை கட்டினால் என்றால் வழமையை விட கூடுதலான அழகுடன் இருப்பார் என கூறுவதுண்டு.
என்ன தான் புடவை கட்டுவதற்கு ஆசையாக இருந்தாலும் உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள் புடவை கட்டுவதற்கு சற்று தயங்கவார்கள்.
காரணம் இன்னும் உடற் பருமன் இருப்பது போன்று இருப்பதாக நினைப்பார்கள். அதற்காக புடவை கட்டாமலும் இருப்பார்கள்.
எனவே என்ன தான் உடல் பருமனாக இருந்தாலும் கூச்சப்படாமல் ஒல்லியயான உடலமைப்புடன் எப்படி தோற்றமளிக்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
உள்பாவைடைகள் அணிவது
புடவை கட்டுவதற்கு முன் உள்பாவைடைகள் அணிவது வழக்கமாகும். இந்த உள்பாவைடைகளை பலரும் மொத்தமான காட்டனாக இருப்பது போல வாங்குவார்கள். ஆனால் உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள் மெல்லிய காட்டனாக இருக்கும் பாவாடையை பயன்படுத்தலாம்.
ஹீல்ஸ் அணியலாமா?
புடவை அணியும் பெண்கள் எப்போதும் தட்டையான செருப்பு அணிவது தான் வழக்கம். ஆனால் உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள் ஹீல்ஸ் அணியலாம்.
மெல்லிய புடவை
மொத்தமான புடவையை ஒல்லியாக இருப்பவர்கள் அணிந்தால் அழகாக இருக்கும். அதுவே உடல் எடை அதிகமாக இருக்கும் பெண்கள் அணிந்தால் மேலும் பருமன அதிகரித்தது போன்று இருக்கும். எனவே எடை அதிகமாக இருக்கும் பெண்கள் மெலிதான புடவையை அணிவது நல்லதாகும்.
முந்தாணை நீளம்
உடல் கொஞ்சம் பருமனாக இருப்பவர்கள் முந்தாணையை நீளமாக விட்டு, பெரிய ஃபிளீட்ஸ் எடுத்து கட்டுவது உடலை மெலிதாகக் காட்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |