கனடாவில் பணியாற்ற விரும்புவோருக்கு பயனுள்ள ஒரு தகவல்: மோசடியாளர்களிடமிருந்து தப்புவது எப்படி?
எப்படியாவது கனடாவில் ஒரு வேலை கிடைத்துவிடாதா என ஆவலுடன் காத்திருப்போர், தங்களைக் குறித்த தனிப்பட்ட விவரங்களை வெளியிடுவது குறித்து முன்பின் யோசிப்பதில்லை. சொல்லப்போனால் பணம் செலுத்தவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த விடயம் இத்தகையவர்களை ஏமாற்ற காத்திருக்கும் மோசடியாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.
2021ஆம் ஆண்டில் மட்டுமே இதுபோல் கனடாவில் வேலை கிடைக்கும் என்று நம்பி பணத்தை இழந்ததாக வந்துள்ள புகார்கள் ஒன்றிரண்டல்ல, 68,000. அவர்கள் இழந்த தொகையோ, சுமார் 231 மில்லியன் டொலர்கள்!
இப்படி கனடாவில் வேலை வாய்ப்பு இருப்பதாக ஏமாற்றும் மோசடியாளர்களிடமிருந்து தப்புவது எப்படி?
ஒரு வேலை வாய்ப்பு அறிவிப்பு போலியானது என அறிந்துகொள்வது எப்படி?
- நீங்கள் விண்ணப்பிக்காத ஒரு இடத்திலிருந்து உங்களுக்கு வேலை இருப்பதாக ஒரு அழைப்பு வந்தால், பெரும்பாலும் அது மோசடியாக இருக்கலாம்.
- அவர்கள் மிக அதிக சம்பளம் தருவதாக வாக்களிப்பதுடன், வயதோ, அனுபவமின்மையோ வேலை பெறுவதற்கு தடையில்லை என்பது போன்ற வாக்குறுதிகளை அளிக்கலாம்.
- சில நேரங்களில், ஒரு பிரபல நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்திக்கூட மோசடியாளர்கள் வேலை வாய்ப்பு இருப்பதாக உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். உடனடியாக அதை நம்பி உங்கள் தகவல்களை அவர்களுக்கு பதில் அனுப்பிவிடவேண்டாம். அந்த நிறுவனத்தைத் தொடர்புகொண்டு, அவர்கள் உங்களுக்கு வேலை வாய்ப்பு இருப்பதாக மின்னஞ்சல் அனுப்பினார்களா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். அப்படி அந்த நிறுவனத்தில் தொடர்பு முகவரி, தொலைபேசி எண் முதலான விவரங்களே அந்த மின்னஞ்சலில் இல்லையென்றால், அப்போதே எச்சரிக்கையாகிவிடுங்கள், அது போலியானதாக இருக்கலாம்.
- வேலை கிடைக்கவேண்டுமானால் பணம் செலுத்தவேண்டும் என மோசடியாளர்கள் கேட்கலாம். சில நேரங்களில், அவர்கள் உங்களுக்கு சில பொருட்களை வாங்கிக்கொள்வதற்காக காசோலை கூட அனுப்பலாம். ஆனால், அந்தக் காசோலை பெரும்பாலும் போலியானதாக இருக்கும். ஆகவே, அதை நம்பி அந்தக் காசோலையைப் பயன்படுத்தி அவரசரப்பட்டு எதையாவது வாங்கிவிடாதீர்கள்.
- இந்த மோசடியாளர்கள், உங்கள் வீட்டு முகவரி, சமூகக் காப்பீட்டு எண் (Social Insurance Number - SIN) போன்ற தனிப்பட்ட தகவல்களைக் கேட்கலாம். தப்பித்தவறிக்கூட உங்கள் சமூகக் காப்பீட்டு எண்ணை யாருக்கும் கொடுத்துவிடாதீர்கள் (சட்டப்படி கேட்கப்பட்டாலொழிய). வேலை கொடுப்பவர்கள் உங்களை வேலைக்கு எடுத்தபிறகே அவர்களுக்கு உங்களுடைய சமூகக் காப்பீட்டு எண் தேவைப்படும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
- கடைசியாக, எந்த விடயத்திற்கும் சம்மதம் தெரிவிப்பதற்கு முன், சிறிது இணையத்தில் அலசி ஆராய்ந்து பாருங்கள். எந்த லிங்கையும் கிளிக் செய்துவிடவேண்டாம். எந்த செய்திக்கும் பதிலளிக்கவேண்டாம். உண்மையான வேலை வழங்கும் ஒருவர் என்று தெரிந்தாலன்றி அவர் அனுப்பும் அந்த விடயத்தையும் பதிவிறக்கம் செய்யவேண்டாம். அனுப்புவரின், மற்றும் அவரது நிறுவனத்தின் பின்னணி குறித்த விடயங்களை இணையத்தில் தேடி ஆராய்ந்து பாருங்கள்.
உங்களுக்கு அந்த வேலை வாய்ப்பு ஆஃபர் போலியானதாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டால், Canadian Anti-Fraud Centre (CAFC) மற்றும் Better Business Bureau (BBB) ஆகிய அமைப்புகளுக்கு அது குறித்து புகாரளிக்கலாம்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
மரண அறிவித்தல்
திரு இரத்தினசாமி ஜெயராசா
Vaddukoddai, கொடிகாமம், Gelsenkirchen, Germany, Langelsheim, Germany
14 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி நாகராசா தனலெட்சுமி
Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு 11ம் வட்டாரம், Toronto, Canada, Brampton, Canada, யாழ்ப்பாணம்
20 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி ருக்குமணி வரதராசா
சுழிபுரம் மேற்கு, லியோன், France, Bobigny, France, London, United Kingdom, அமெரிக்கா, United States
20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017