உங்கள் ஸ்மார்ட்போன் தொலைந்துவிட்டால் கண்டுபிடிப்பது-லாக் செய்வது எப்படி தெரியுமா? இதை மட்டும் செய்யுங்க போதும்
நம்மிடம் இருக்கும் பொருட்களில் மிகவும் அத்தியாவசியமான பொருளாக மாறிவிட்டது,
இந்த ஸ்மார்ட்போன். ஏனெனில் இந்த ஸ்மார்ட்போனில் நமக்கு தேவையான அனைத்து விஷயங்களும் இருக்கும், புகைப்படம், வீடியோக்கள், குடும்ப விபரம், வங்கி கணக்கு விவரங்கள் என பல வசதிகள் இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் கொடுக்கப்படுகிறது.
அப்படிப்பட்ட இந்த ஸ்மார்ட் போன் திடீரென்று தொலைந்து போய்விட்டால், நமக்கு பல விஷ அச்சங்கள் எழும், யாரும் எந்த போனை எடுத்து எதுவும் செய்துவிடுவார்களோ? தவறான வழியில் பயனப்டுத்திவிடுவார்களா? என பல எண்ணங்கள் நம் மனதில் ஓடும்,
இனி அந்த கவலை எல்லாம் தேவையில்லை. ஒருவேளை உங்கள் ஸ்மார்ட் போன் தொலைந்து போய்விட்டால் அதைக் கண்டுபிடிக்க இப்போது ஏராளமான வழிகள் வந்துவிட்டது.
அதைப் பற்றி இங்கு பார்ப்போம்.
தொலைந்து போன ஸ்மார்ட் போன்
தற்போது வரும் பெரும்பாலான iOS அல்லது Android மொபைல் போன்களில் iCloud என்ற ஒரு வசதி உள்ளது. இது ஐபோன்களிலும் இருக்கிறது. இதில் நீங்கள் முன்னரே ஒரு அக்கவுண்ட்டை(இமெயில் அக்கவுண்ட்) பதிவு செய்து வைத்திருந்தால், அதன் மூலம் உங்கள் போனை நீங்கள் தொலைவில் இருந்தே யாரும் பயன்படுத்த முடியாத அளவிற்கு லாக் செய்ய முடியும்.
அதுமட்டுமின்றி போன் ஒலியை எழுப்பச் செய்யலாம். போனை திறந்தவுடன், அதை யார் கண்டாலும் அது தொடர்பான தகவல்களை உடனடியாக நீங்கள் வைத்திருக்கும் இமெயில் அக்கவுண்ட்டிற்கு வந்துவிடும்.
ஆனால் இது எல்லாம் தொலைந்து போன போனின் பேட்டரியில் சார்ஜ் இருக்கும் வரை மட்டுமே செய்ய முடியும்.
தொலைந்து போன Android போனை எப்படி கண்டுபிடிப்பது?
தொலைந்த ஆண்ட்ராய்டு கைபேசியைக் கண்டுபிடிப்பதற்கான எளிதான வழி, கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது. அதில், ஒன்று தான் Find my device android. இதை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்,
இது Android 2.3 அல்லது அதற்குப் பிறகு இயங்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
Go to Settings > Google (or Google services) > Security and make sure Remotely locate this device is turned on in the Find My Device section. இந்த ஆப்பை நீங்கள் பதிவிறக்கம் செய்த பின்பு, அதில் Find my device என்ற ஆப்சன் இருக்கும்,
அதை ஆன் செய்து வைத்து கொள்ள வேண்டும். அதன் பின் உங்கள் போன் தொடர்பான தகவல்கள் உங்கள் இமெயில் அக்கவுண்ட்டிற்கு சென்று கொண்டே இருக்கும்.
ஸ்மார்ட்போனை கண்டுபிடிக்க முடியாமல் போனால்?
ஒருவேளை உங்கள் ஸ்மார்ட் போனை கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டால், ஆண்ட்ராய்டு 5.0 பயனாளர்களுக்கு ஒரு புதிய வசதி உள்ளது. அதாவது, ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப்பில் Factory Reset Protection (FRP) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது உங்கள் ஸ்மார்ட்போனை திருட்டில் இருந்து தடுக்க மற்றும் வேறொருவருக்கு விற்பதை தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் உங்களின் கூகுள் இமெயில் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்ட்டுடன் பதிவு செய்து வைத்து கொள்ள வேண்டும்,
இதை வைத்து நீங்கள் உங்கள் போனை லாக் செய்து கொள்ளலாம். அதன் பின் நீங்கள் அந்த பாஸ்வேர்ட்டை போட்டால் மட்டுமே அந்த லாக்கை எடுக்க முடியும். இதை ஹெக் செய்து லாக் எடுப்பது என்பது மிகவும் கடினம்.
சாம்சங் ஸ்மார்ட்போன்
சில சாம்சங் ஸ்மார்ட்போன்களில் Find My Mobile என்ற சேவை உள்ளது. இது காணாமல் போன போனை கண்டுபிடிக்க, லாக் செய்ய பயன்படுத்தலாம். ஆனால், இதற்கு உங்களுக்கு சாம்சங் கணக்கு(சாம்சங் இமெயில் அக்கவுண்ட்) தேவை.
இதை நீங்கள் கையில் இருக்கும் ரிமோர்ட் கண்ட்ரோல் போன்று இயக்கலாம்.
Go to Settings > Biometrics & Security.
If you see Find My Mobile in the menu, you can use the service.
Enable the Remote Controls options via Settings > Biometrics & Security > Find My Mobile > Remote control-இதைப் பயன்படுத்தி அந்த போனை பயன்படுத்த முடியாமலே செய்ய முடியும்.