புழக்கத்தில் புதிய 500 ரூபாய் கள்ளநோட்டு - எப்படி கண்டுபிடிப்பது?
இந்தியாவில் புதிதாக 500 ரூபாய் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் வந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் (MHA) அவசர எச்சரிக்கையாக விடுத்துள்ளது.
கள்ளநோட்டை கண்டுபிடிப்பது எப்படி?
மேலும், வருவாய் புலனாய்வு இயக்குநரகம், நிதி புலனாய்வுப் பிரிவு, CBI, NIA, SEBI, போன்ற முக்கியமான அரசு நிறுவனங்களுக்கு இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அச்சு அசலாக, உண்மையான 500 ரூபாய் நோட்டு போலவே உள்ள இந்த கள்ளநோட்டை எப்படி கண்டுபிடிப்பது, என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த கள்ள நோட்டில் எழுதப்பட்டுள்ள “RESERVE BANK OF INDIA” என்பதில், “RESERVE” இல் உள்ள “E” என்ற எழுத்து தவறுதலாக “A” என்று பிழையாக அச்சிடப்பட்டுள்ளது.
பணப்பரிவர்தனையின் விழிப்புடன் இருக்குமாறும், இது போன்ற கள்ள நோட்டை, யார் எங்கிருந்து பெற்றாலும் அதை உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறும் மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுபவர்களை கண்டுபிடிக்க, NIA உள்ளிட்ட அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.