உங்கள் செல்போன் Hack செய்யப்பட்டுள்ளதா? எளிதாக தெரிந்து கொள்வது எப்படி?
தொழில்நுட்ப வளர்ச்சி உச்சத்தில் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் பெரும்பாலான வேலைகள் அனைத்தையுமே செல்போன் வழியாகவே செய்து முடித்துவிடுகிறோம் .
நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்புவது முதற்க்கொண்டு , பில் செலுத்துவது , வங்கி பண பரிமாற்றங்களை மேற்கொள்ளுவது , பொருள்களை ஆன்லைனில் வாங்குவது என அனைத்து வேலைகளையும் செல்போன் மூலமாகவே செய்துவிடுகின்றோம் .
ஆகையால் நம்மைப்பற்றிய சொந்த தகவல்கள் (போட்டோ , வீடியோ , மெசேஜ் முதலியன ) , வங்கி தகவல்கள் என அனைத்துமே நமது மொபைலுக்குள் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே .
சரி விடயத்துக்கு வருவோம்!
ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மொபைல் போன்கள் ஹேக்கிங் செய்யப்படுகின்றது என்பது உங்களுக்கு தெரியுமா?
செல்போன்கள் ஹேக்கிங் செய்யப்படுவதற்கு காரணம் என்ன?
உங்களுடைய சொந்த விசயங்களான போட்டோ , வீடியோ , டாக்குமெண்ட்ஸ் (Personal Details – Photo, Video, Documents) போன்றவற்றை உங்களுக்கு தெரியாமல் அறிந்துகொள்ள.
உங்களுடைய password களை (Banking, Websites, Social Media Accounts) அறிந்துகொள்வதற்காக
உங்களுடைய நடவெடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து அந்த தகவல்களை பயன்படுத்துவது
Hack செய்யப்பட்டிருப்பதை அறிவது எப்படி?
அடிக்கடி இறங்கும் பேட்டரி சார்ஜ் [Battery
உள்ளுக்குள் இயங்கும் Spy App தொடர்ச்சியாக உங்களது தகவல்களை இன்னொரு நபருக்கு (Host க்கு) அனுப்பிக்கொண்டே இருக்கும் . ஆகையால் உங்களது மொபைல் பயன்படுத்தாமல் இருந்தாலும் Spy App இயங்குவதனால் பேட்டரி சார்ஜ் அடிக்கடி குறையும் .
திடீரென உங்களது மொபைலில் இதனை கண்டறிந்தால் அதிகமாக இயங்கிய ஆப்களின் தரவுகளை சோதித்துப்பாருங்கள் . ஏதேனும் ஒரு ஆப் தேவையில்லாமல் செயல்பட்டிருந்தால் அதனை uninstall செய்துவிடுங்கள் .
திடீரென நாம் பயன்படுத்துகின்ற டேட்டாவின் அளவு அதிகரிக்கும் . Background இல் செயல்படும் App தொடர்ச்சியாக தகவலை அனுப்பிக்கொண்டு இருப்பதனால் டேட்டாவின் பயன்பாடு அதிகரிக்கும் .
கோளாறுகளை சரி செய்ய கடைகளில் கொடுக்கும்போதும் Spy App களை இண்ஸ்டால் செய்துகொடுக்க வாய்ப்புகள் அதிகமிருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்