உங்கள் பேஸ்புக் பக்கத்தை யாரெல்லாம் பார்த்தார்கள் என்பதை மிக எளிதாக கண்டுபிடிப்பது எப்படி?
பேஸ்புக்கில் இல்லாத பேஸ்களே இன்று இல்லை என சொன்னால் அது மிகையாகாது அந்தளவுக்கு பேஸ்புக் பயனாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நம்முடைய பேஸ்புக் பக்கத்தை யாரெல்லாம் பார்த்தவர்கள் என்பதை iOS மொபைல் வைத்திருப்பவர்களும், கம்ப்யூட்டரில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களும் அறிந்து கொள்ள முடியும். பேஸ்புக் பொறுத்தவரை நம்முடைய கருத்துகள், புகைப்படங்கள்,சிறிய அளவிலான வீடியோக்களை பகிர்வதை பலரும் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
பகிரும் புகைப்படங்களுக்கு கிடைக்கும் லைக்குகளுக்கு ஏற்ப, எத்தனை பேர் நம் தகவலை பார்த்துள்ளார்கள் என்பதை யூகித்துக்கொள்ளலாம்.
பலர் பார்த்துவிட்டு கூட லைக் அல்லது கமெண்ட் என எதுவும் கொடுக்காமல் கூட செல்வார்கள். ஆனால், நம் புரோபைலை எத்தனை பேர் பார்த்துள்ளார்கள்? என்பதை நம்மால் இதுவரை அறிய முடியாத வகையில் இருந்தது.
அந்த குறையை போக்கும் வகையில், பேஸ்புக் புதிய அம்சம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நம் புரோபைலை யாரெல்லாம் பார்த்துள்ளார்கள்? என்பதை நம்மால் கண்டுபிடிக்க முடியும்.
iOS வெர்சன் மொபைல் வைத்திருப்பவர்கள், தங்களது மொபைலில் இருக்கும் பேஸ்புக் செயலியில் இருக்கும் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று அறிந்துகொள்ளலாம்.
மொபையில் முகநூலுக்கு சென்று பேஸ்புக் செட்டிங்க்ஸ் (Facebook Settings)-க்குள் செல்ல வேண்டும். அங்கு இருக்கும் பிரைவசி ஷார்ட்கட்ஸ் (Privacy Shortcuts)- க்குள் நுழைந்தால் Who viewed my profile என்ற ஆப்சன் இருக்கும்.
அதனுள் சென்று உங்கள் பேஸ்புக் புரோபைலை யாரெல்லாம் பார்த்துள்ளார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். இந்த அம்சம் 2018 ஆம் ஆண்டு பேஸ்புக் அறிமுகப்படுத்தியது.
ஆன்டிராய்டு போன் வெர்சன்களுக்கு இந்த வசதியை இதுவரை பேஸ்புக் அறிமுகப்படுத்தவில்லை. எப்போது அறிமுகப்படுத்தும் என்ற அறிவிப்பும் ஏதும் இல்லை.
ஆனால், பேஸ்புக்கை கம்ப்யூட்டரில் பயன்படுத்துபவர் என்றால், நீங்கள் உங்கள் பேஸ்புக் பக்கத்தை பார்த்த நண்பர்களின் விவரங்களை அறிந்து கொள்ள முடியும்.
உங்கள் பேஸ்புக் பக்கத்தை முதலில் Log in செய்யுங்கள்.
ஹோம் பேஜில் ஏதாவதொரு இடத்தில் கர்சரை வைத்து Right click செய்யுங்கள். அப்போது, view page source என்ற option- யை கிளிக் செய்யுங்கள். தற்பொழுது மற்றொரு Window ஓபன் ஆகியிருக்கும்.
அதில் [ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும். நீங்கள் இதனை செய்தவுடன், ஒரு மூலையில் Search Bar என்ற சிறிய box, Open ஆகியிருக்கும்.
அந்த Search Bar -ல் friendslist அல்லது BUDDY_ID என்று Type செய்து Enter செய்யவும்.
நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும்.
தற்போது காட்டப்படும் லிஸ்டில், “list””1000011 345400-2, “10000043254566 -3 என்ற எண்கள் திரையில் தெரியும்.
அதாவது இதில் 1000011345400 என்பது நண்பர்களுடைய facebook account number. ஒவ்வொருவருக்கும் இது போன்று தனித்தனியாக id உண்டு.மேலும் அதன் அருகில் உள்ள -2 அல்லது -3 என்பது உங்கள் FB Profile அவர்கள் எத்தனை முறை பார்த்துள்ளனர் என்ற எண்ணிக்கையாகும்.
திரையில் இருக்கும் இந்த எண்களை காப்பி செய்து, new tab-ல் www.facebook.com -க்கு சென்று, அதன் அருகில் நீங்கள் Copy செய்துவைத்திருக்கும் facebook account number- ஐ past செய்யவும். பின்னர், Enter கொடுத்தால், உங்கள் பேஸ்புக் பக்கத்தை பார்த்தவரின் அக்கவுண்ட் திரையில் தோன்றுவதை நீங்கள் காண முடியும்.