இளஞ்சிவப்பான உதட்டை பெற இந்த ஒரு பொருள் போதும்: எப்படி பயன்படுத்துவது?
பெண்கள் எப்பொழுதும் தங்கள் உதடுகளை அழகாக வைத்து கொள்ளத்தான் நினைப்பார்கள்.
தங்களின் உதடுகள் வெடிப்பு இல்லாமல் ஈரப்பதத்தோடு இருக்க வேண்டும் என்று தான் அனைத்து பெண்களும் விரும்புவார்கள்.
உதடுகளின் வெடிப்புகளை விரைவாக, இற்கையான முறையில் இளஞ்சிவப்பாக மாற்ற தேன் ஒன்று போதும்.
தேவையான பொருட்கள்
- தேன்- 1 ஸ்பூன்
- கற்றாழை- ½ ஸ்பூன்
- பழுப்பு சர்க்கரை- 1 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு பவுலில் தேன், கற்றாழை ஜெல், பழுப்பு சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை உதடுகளில் தடவி 2 நிமிடங்கள் வட்ட இயக்கத்தில் மெதுவாக ஸ்க்ரப் செய்யவும்.
பின் ஒரு சுத்தமான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து உதடுகளை துடைத்து பின் உலர வைக்கவும்.
வாரத்திற்கு 3 முறை தடவி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
தேன் மற்றும் கற்றாழை ஜெல் ஒரு சிறந்த நீரேற்றம் மற்றும் உதடுகளை குணப்படுத்த வேலை செய்கிறது.
இயற்கை பொருளான கற்றாழை ஜெல் உலர்ந்த, வெடிப்பு உதடுகளை ஆற்றும் மற்றும் இறந்த சருமத்தை நீக்கி சருமத்தை மென்மையாக்குகிறது.
மேலும், தேன் சரும செல்களை சரிசெய்யவும், உதடு வெடிப்புகளை குணப்படுத்தவும் உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |