சுவிட்சர்லாந்தில் அதிக ஊதியம் பெறுவது எப்படி?
சுவிட்சர்லாந்தில், பட்டம் பெற்று 10 ஆண்டுகள் ஆகியும், தொடர்ந்து பணி தொடர்பில் பயிற்சிகள் எடுத்துக்கொண்டே வருவது, அதிக ஊதியம் பெற உதவும் என்கிறது ஆய்வொன்று.
ஆய்வு முடிவுகள்
சுவிஸ் புள்ளியியல் அலுவலகம் மேற்கொண்ட ஆய்வொன்றின் முடிவுகள், பட்டம் பெற்று 10 ஆண்டுகள் ஆகியும், தொடர்ந்து பணி தொடர்பில் பயிற்சிகள் எடுத்துக்கொண்டே வருபவர்கள், பயிற்சிகள் எடுக்காமல் இருப்பவர்களைவிட 400 முதல் 1,300 சுவிஸ் ஃப்ராங்குகள் அதிகம் சம்பாதிப்பதாக தெரிவிக்கின்றன.
இந்த விடயம், ஒருவர் என்ன கல்வி கற்றிருக்கிறார் என்பதையும் சார்ந்தது என்பதை மறுப்பதற்கில்லை.
அதாவது, ஒருவர் கற்றது வெறும் பட்டப்படிப்பா, அல்லது தொழில்துறை பட்டயப்படிப்பா அல்லது அதிலும் உயர்மட்ட தொழில்துறை பயிற்சி பெற்றவர்களா என்பதைப் பொருத்தும், அவர்கள் தொடர்ந்து பயிற்சிகள் பெறுகிறார்களா என்பதைப் பொருத்தும் இந்த ஊதிய உயர்வு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |