ஒரே நாளில் கருப்பான உதட்டை சிவப்பாக மாற்றும் எளிய முறை - கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
இயற்கையாகவே இளஞ்சிவப்பு நிற உதடுகளை தான் பெண்கள் அதிகமாக விரும்புவார்கள். இருப்பினும், அழகு என்பது காலப்போக்கில் மாறுகின்றன.
அதுப்போலவே உதட்டின் வண்ணமும் மாறிவிடும். பலருக்கு கருமையான உதடும் இருக்கிறது. இது அவர்களின் மொத்த அழகையும் தடுக்கிறது என்று கூறலாம். எனவே வீட்டில் இருக்கும் ஒரு சில எளிய பொருட்களை வைத்து எப்படி கருமையான உதட்டை மாற்றலாம் என தெரிந்துக்கொள்வோம்.
உதடுகளில் கருமை ஏற்பட என்ன காரணம்?
தோல் நிறத்தைப் போலவே, உதடுகளின் நிறமும் நபருக்கு நபர் மாறுபடும். கருமையான சருமம் உள்ளவர்களுக்கு உதடுகள் கருமையாக இருக்கும்.
இயற்கையாகவே கருமையான உதடுகளைக் கொண்டவர்கள் வீட்டு வைத்தியம் மூலம் தற்காலிகமாக அவர்களை இளஞ்சிவப்பு நிறமாக மாற்ற முடியும்.
இயற்கையான முறையில் இளஞ்சிவப்பு உதடுகளை பெறுவது எப்படி?
முதலில் பீட்ரூட்டை தோல் உரித்து சிறிய துண்டுகளாக வெட்டி மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
பின் சிறிதளவு பால் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
அரைத்து எடுத்த பேஸ்டை வடிக்கட்டி சாறு மற்றும் தனித்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, மஞ்சள் மற்றும் தேன் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
தனியாக பீட்ரூட் சாறு எடுத்து வைத்ததை அடுப்பில் வைத்து சூடாக்கிக் கொள்ளவும்.
கெட்டியாக வரும் போது சுத்தமான நெய் சேர்த்து மீண்டும் கிளற வேண்டும்.
அடுப்பில் இருந்து இறக்கிய ஆறியவுடன் ஒரு சிறிய டப்பாவில் அடைத்து 2 மணி நேரம் குளிரூட்டியில் வைக்கவும்.
பயன்படுத்தும் முறை
முதலில் மஞ்சள் மற்றும் சர்க்கரை சேர்த்து தயார் செய்து வைத்திருந்த கலவையை வைத்து உதட்டில் தேய்த்து சுத்தம் செய்துக்கொள்ளவும்.
அடுத்ததாக குளிரூட்டியில் வைக்கப்பட்டிருந்த கலவையை உதட்டில் பூசலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |