முழங்கை, முழங்கால்களில் உள்ள கருப்பு நிறத்தை போக்க எளிய வீட்டு வைத்தியம்
ஒரு சிலருக்கு வாயை சுற்றியும், முழங்கை, முழங்கால்கள் அடர் கருப்பு நிறத்தில் இருக்கும்.
அந்தவகையில் முழங்கை, முழங்கால்களில் உள்ள கருப்பு நிறத்தை போக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம் குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பசு நெய்- 1 ஸ்பூன்
- மஞ்சள்- அரை ஸ்பூன்
- பன்னீர்- 3 ஸ்பூன்
பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு கிண்ணத்தில் பசு நெய், மஞ்சள் தூள் மற்றும் பன்னீர் சேர்த்து நன்கு கலக்கவும்.
அடுத்து ஒரு பேஸ்ட் போல் நன்கு கலந்து வாயில் இரு ஓரத்தில் கருப்பாக இருக்கும் இடத்தில் மெதுவாக தடவவும்.
அதேபோல் முழங்கை முழங்கால் உள்ளிட்ட பகுதிகளில் நன்றாக தடவி மசாஜ் செய்யவும்.
இதற்கடுத்து 15 நிமிடம் உலர வைத்துவிட்டு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.
இதேபோல் தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு செய்து வந்தால் கருமையான முழங்கை, முழங்கால், வாய் சுற்றியுள்ள கருப்பு நிரந்தரமாக மறைந்துவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |