அக்குள் கருமையை போக்க இது இருந்தால் போதும்!
பொதுவாகவே பெண்களுக்கு அக்குள் கருமை என்பது ஒரு தொந்தரவான பிரச்சினையாகும்.
ஷேவிங் செய்வது, சருமப் பிரச்னைகள், இறுக்கமான ஆடை அணிவதால் ஏற்படும் உராய்வு, புகைபிடித்தல் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த அக்குள் கருமை பிரச்சினை ஏற்படுகின்றது.
ஆகவே இதை எப்படி இயற்கையான முறையில் அகற்றலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தயிர்
தயிர், மஞ்சள் தூள், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து அக்குளில் பூசி 10 நிமிடங்கள் ஊற விடவும். இதை தினமும் செய்து வர கருமை நீங்கும்.
பேக்கிங் சோடா
பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து அக்குளில் தடவி உலர வைக்கவும். இதை தினமும் செய்ய கருமை நீங்கும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காயை தினமும் வெட்டி, அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும். வெள்ளரிக்காய் சாற்றில், சிறிது எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, உலர விட்டு கழுவினால் கருமை நீங்கும்.
ஆரஞ்சு தோல்
ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, அத்துடன் பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் உலர விட்டு கழுவ வேண்டும்.
அதிமதுரவேர்
அதிமதுர வேரை தண்ணீரில் ஊறவைத்து அரைத்து அதனை அக்குளின் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைத்துக் கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
கற்றாழை
கற்றாலையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து சுமார் ஒரு மணிநேரம் ஊறவைக்க வேண்டும். இதை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்ய கருமை நீங்கும்.
குங்குமப்பூ
குங்குமப்பூவை பாலில் ஊறவைத்து அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து பின் நீரில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்ய கருமையும் நீங்கும் புள்ளிகளும் நீங்கும்.
தயிர் எலுமிச்சை
தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து அக்குளில் தடவி 10 நிமிடம் உலர வைத்து நீரில் கழுவவேண்டும். ஒரு வாரத்திற்கு செய்து வர கருமை நீங்கும்.
சந்தனப்பவுடர்
சந்தனப்பவுடரை பால் ஊற்றி குலைத்து அதில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அக்குளில் தடவி காய வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவவேண்டும். வாரத்தில் 2 முறை செய்ய நல்ல பலனை பெறலாம்.
சர்க்கரை
சர்க்கரையைக் கொண்டு அக்குளைப் பராமரித்து வந்தால், சர்க்கரையானது அக்குளில் உள்ள இறந்த செல்களை நீக்கி கருமையை போக்கும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் கொண்டு தினமும் மூன்று முறை மசாஜ் செய்து வந்தால், அக்குள் கருமை நீங்கிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |