உங்க தலைமுடி பிசு பிசுன்னு இருக்கா? இதனை எப்படி எளிய முறையில் போக்கலாம் தெரியுமா?
பொதுவாக இன்றைய சூழ்நிலையில் முடி பராமரிப்பு என்பது மிகவும் கடினமாக மாறிக்கொண்டு வருகிறது.
நாம் அன்றாட வாழ்க்கையில் செய்யும் சிறு சிறு தவறுகள் நம்மை பாதிக்கிறது. அதிலும் நம்மில் பலருக்கு என்னத்தான் ஷாம்பு போட்டு குளித்தாலும் தலைமுடி பிசு பிசுப்பாகவே காணப்படும்.
சுத்தமில்லாத அழுக்கு படிந்த சீப்பால் தலை சீவுவது, அழுக்கு படிந்த கனமான தலையணையில் தூங்குவது போன்றவற்றால் அதிலுள்ள பாக்டீர்யாக்கள் பரவி முடியின் எண்ணெய் உற்பத்தி ஆரோக்கியத்தை சீர் குலைக்கலாம்.
இதனால் முடி எப்போதும் பிசுபிசுப்பு தன்மையுடன் காணப்படும்.
இதனை எளியமுறையில் கூட போக்கலாம். தற்போது அவற்றை இங்கே பார்ப்போம்.
- இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு சொம்பு நீரில் கலந்து ஷாம்பு செய்த பிறகு கூந்தலில் விட்டு கூந்தலை சுத்தம் செய்யவும். சில நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவி விடவும்.
- ஒரு கப் தண்ணீரில் இரண்டு டீஸ்பூன் கற்றாழை சாறுடன் சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். ஷாம்பு செய்த பிறகு இந்த கலவையை தலைமுடியில் அலசி எடுக்கவும். இது பிசுபிசுப்பை நீக்கும்.
-
முட்டையின் மஞ்சள் கருவை மட்டும் எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து சுத்தம் செய்த தலைமுடியில் தடவி விடவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக அலசி எடுக்கவும்.
-
முல்தானி மிட்டியை எடுத்து தண்ணீரில் கரைத்து கூந்தலில் தடவி கூந்தலை அலசி எடுக்கவும்.
-
ஷாம்பு செய்த பிறகு கூந்தலை அரிசி நீரில் கழுவி எடுக்கவும். இதை ஒவ்வொரு வாரமும் முடி சிகிச்சைக்கு பயன்படுத்தலாம்.
-
தண்ணீரில் க்ரீன் டீ தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். பிறகு குளிர்ந்ததும் உங்கள் உச்சந்தலையில் மற்றும் முடிக்கு தடவி எடுக்கவும். பிறகு 30 முதல் 40 நிமிடங்களுக்கு பிறகு கூந்தலை அலசவும்.
-
காய்ச்சி வடிகட்டிய தண்ணீர் 2 கப் அளவு எடுத்து அதில் 4 முதல் 5 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன் கலக்கவும். பிறகு இதை குளிர்ச்சியாக்கி தலைகுளியலுக்கு பிறகு இந்த நீரை கொண்டு கூந்தலை அலசி எடுக்கவும்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.