நுரையீரலில் இருக்கும் சளியை எளிய முறையில் எப்படி வெளியேற்றலாம்?
பொதுவாக இன்று பலரும் சந்திக்கும் பிரச்சினையாக நுரையீரல் பிரச்சினை உள்ளது. நாள்ப்பட்ட சளியின் காரணமாக நுரையீரல் அடிக்கடி பிரச்சினை உருவாகுகின்றது. நுரையீரல் சளி பலவகையான பிரச்சனைகளை உருவாக்கும்.
குறிப்பாக நுரையீரலில் சளி அதிகரிக்க அதிகரிக்க உடலின் இயக்கமானது குறைக்கப்படுகிறது, மேலும் இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது, நமது எலும்புகள் அனைத்தையும் வலுவிழக்க செய்கிறது, மேலும் நம்முடைய நாடி, நரம்புகள் அனைத்தையும் தளர்ந்து போக வழிவகுக்கிறது.
எனவே இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்துவது நல்லது. இதற்கு இயற்கை பொருட்களில் ஒன்றான கரிசலாங்கண்ணி பெரிதும் உதவுகின்றது. கரிசலாங்கண்ணி இலையில் உள்ள மருத்துவ பயன்கள் நுரையீரலில் உருவாகும் சளியை சரி செய்ய பெரிதும் உதவுகிறது.
இந்த கரிசலாங்கண்ணி கீரையை கொண்டு இயற்கை மருந்து தயாரித்து குடிப்பதனால் நுரையிரலில் உள்ள சளி உடனடியாக வெளியாகுகின்றது.
தற்போது இந்த அற்புத மருந்தை எப்படி தயாரிக்கலாம் என பார்ப்போம்.
தேவையானவை
- வேறுருடன் இருக்கும் கரிசலாங்கண்ணி கீரை – ஒன்று
- நெய் –தேவையான அளவு
- மிளகு தூள் – சிறிதளவு
செய்முறை
- வேருடன் உள்ள கரிசலாங்கண்ணி இலையை நன்றாக சுத்தம் செய்துகொண்டு, மைபோல் நான்றாக அரைத்து கொள்ளவும்.
- பின்பு ஒரு கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு அவற்றில் அரைத்து வைத்துள்ள கரிசலாங்கண்ணி பேஸ்ட் மற்றும் சிறிதளவு மிளகு தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி விட்டு, மெழுகு பதத்திற்கு வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, பதப்படுத்தி வைக்க வேண்டும்.
- முக்கிய குறிப்பு இந்த கரிசலாங்கண்ணி இயற்கை மருந்து தயார் செய்யும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்துதான் தயார் செய்ய வேண்டும்.
- இந்த இயற்கை மருந்தை அதிகாலை எழுந்து, பல் துலக்கிவிட்டு, தங்களது வலது கை பெருவிரலால் இந்த மருந்தை தொட்டு எடுத்து கொள்ளவும்.
பின்பு தங்களது வாயை நன்றாக திறந்து, உள்நாக்கில் உள்ள மேல் துவாரத்தில் இந்த மருந்தை வைக்க வேண்டும்.
-
பின்பு 1/2 மணி நேரம் வரை காத்திருக்கவும், இவ்வாறு காத்திருக்கையில் சூஷ்ம நாடிகளுக்குள் உறைந்திருக்கும் சளி அனைத்தும் நூல்நூலாக வெளியேறும்.
-
இந்த முறையை தொடர்ந்து 45 நாட்கள் வரை அதிகாலை சூரியன் உதிப்பதற்குள் செய்துவர நுரையீரலில் சளி அனைத்தும் வெளியேறிவிடும்.