பெண்களை அதிக வெள்ளைப்போக்கால் அவதியா? கவலை விடுங்க.. வாழைப்பூவை இப்படி எடுத்துகோங்க
பொதுவாக பெண்கள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சினைகளுள் வெள்ளைப்படுதலும் ஒன்றாகும்.
வெள்ளைப்படுதல் என்பது சாதாரணமானது என்றாலும் பல நேரங்களில் அசாதாரணமாக சிலருக்கு வெளிப்படக்கூடும்.
துர்நாற்றத்தோடு வெள்ளைப்படுதல் அல்லது அசாதாரணமாக வெள்ளைப்படுதல் உண்டாகும் போதே அதை சரிசெய்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இதற்கு ஒரு சில இயற்கை பொருட்கள் உதவுகின்றது. அதில் வாழைப்பூவும் ஒன்றாகும்.
வெள்ளைப்படுதல் தீவிரமாகும் போது அதை தடுக்க உணவு முறையில் வாழைப்பூவை சேர்க்கலாம்.
அந்தவகையில் தற்போது இதனை எப்படி எதனுடன் சேர்த்து எடுத்துகொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
தேவையானவை
- வாழைப்பூ - 15
- கசகசா - கால் டீஸ்பூன் அளவு
- வெந்தயம் - அரை டீஸ்பூன்
- பிஞ்சு கடுக்காய் - கால் அளவு
செய்முறை
வாழைப்பூவை ஆய்ந்து உள் இருக்கும் நரம்பை மட்டும் நீக்கி பொடியாக நறுக்கவும். வெந்தயத்தையும் கடுக்காயையும் சுத்தம் செய்து சிறு உரலில் இட்டு இடிக்கவும். அப்படியே கசகசாவையும் சேர்த்து நைஸாக பொடிக்கவும்.
இதனுடன் வாழைப்பூ சேர்த்து நன்றாக இடிக்கவும். சிரமமாக இருந்தால் மிக்ஸீயில் இடித்து சாறு எடுத்து குடிக்கவும்.
தினமும் வெறும் வயிற்றில் 25 மில்லி அளவு இந்த சாறை குடித்து வர வேண்டும்.தொடர்ந்து 10 நாட்கள் வரை இதைகுடித்தால் அதிகமாக வெள்ளைப்படுதல் பட்டென்று நிற்கும்.
தொடர்ந்து வாரக்கணக்கிலும் மாதக்கணக்கிலும் குடித்து வரக்கூடாது. இடைவெளி விட்டு எடுத்த்கொள்ள வேண்டும்.