இந்த ஆவணம் இருந்தால் போதும்... உடனே தென் கொரியாவுக்கான விசா கிடைக்கும்
பொதுவாகவே அனைவருக்கும் உலகை சுற்றி சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும்.
அதிலும் தற்போதைய சமூகத்தினரிடையே BTS, K-pop இன் பிரபல்யம் பரவலாக காணப்படுகிறது. அதற்காக பலரும் தற்போது தென் கொரியாவிற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
ஆனால் அவ்வளவு எளிதில் எங்கு செல்வதற்கும் விசா கிடைப்பதில்லை. அதுபோலவே தென் கொரியாவிற்கும் விசா எளிதில் கிடைப்பதில்லை.
தென் கொரியாவில் சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. அந்நாடு தூய்மையானதாக இருப்பதால் பலரும் செல்வதற்கு விரும்புவார்கள்.
இயற்கை எழில் பொருந்திய இடங்களும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டமைக்கப்பட்ட இடங்களும் ஏராளமாக தென் கொரியாவில் காணப்படுகிறது.
இதை பார்ப்பதற்கு செல்பவர்களை விட BTS, K-pop பார்ப்பதற்காக செல்ல விரும்புவர்களே அதிகம். தென் கொரியாவில் வாழ்வாதாரம் தேடுவது எளிதான காரியம் அல்ல.
தென்கொரியாவில் நீங்கள் வசிக்க வேண்டுமென்றால் கொரிய மொழி மட்டும் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அங்கு படித்தால் மட்டுமே வேலை கிடைக்க அதிக வாய்ப்பு உண்டு.
குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய் இருந்தால் மட்டுமே கொரியாவில் படிக்க முடியும். இதற்கு பதிலாக நீங்கள் சுற்றுலா விசா மூலம் சென்று 80 நாட்கள் வரை தென் கொரியாவில் தங்கி சுற்றி பார்க்கலாம்.
அந்த விசா பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் குறித்தும் அங்கு பார்க்க வேண்டிய இடங்கள் குறித்தும் விரிவாக இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
தென் கொரியா விசா பெறும் முறை
தென் கொரியா செல்ல சுற்றுலா விசா பெற்றலா் சிறந்ததாக இருக்கும்.
குறுகிய காலம் (லாப நோக்கமற்ற & தங்கும் விசா)
வகை : தற்காலிக வருகை
எதற்காக ? சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக சுற்றுலா விசா என தேர்வு செய்ய வேண்டும்.
வங்கி கணக்கில் குறைந்தபட்சம் 5 லட்சம் முதல் 7 லட்சம் ரூபாய் வரை இருக்க வேண்டும்.
மாத வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும்.
கொரியாவில் உள்ள உறவினர்கள் அழைக்கும் விதமாக கடிதம் இருந்தால் இன்னும் எளிதில் விசா கிடைக்கும்.
விசா பெறுவதற்கு தேவையானவை
- கடவுசீட்டு (Passport)
-
சமீபத்தில் எடுத்த 2 Passport அளவிலாக படங்கள்
- இணையவழி விசா விண்ணப்ப படிவம்
-
பணியாளர் அட்டை (ஊதிய சீட்டு, வருமான வரி விவரம்)
- வங்கிக் கணக்கின் 6 மாதம் விபரம்
- மருத்துவ சான்றிதழ்
-
சுய தொழில் செய்பவராக இருந்தால், நிறுவனத்தின் மூன்று வருட வருமான வரி தாக்கல் விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
தென் கொரியா விசா கட்டணம்
-
சாதாரண கட்டணம் : 3,200 + செயலாக்க கட்டணம் 1,380 = மொத்தம் 4,580
- அவசர தேவை : சாதாரண கட்டணம் + கூடுதலாக 2,400 = மொத்தம் 6,980
விண்ணப்பிக்கும் முறை
1. ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்யலாம்.
2. தென் கொரியா விசா மையத்திற்கு நேரில் சென்று விசா கட்டணம் செலுத்தவும்.
3. தேவையான விபரங்களை அதிகாரிகளிடம் முதலில் ஒப்படைக்கவும்.
4. நீங்கள் வழங்கிய விபரங்களை சோதித்த பின் விசா ஏற்கப்பட்டதா ? நிராகரிக்கப்பட்டதா ? என தகவல் கிடைக்கும்.
5. ஏற்கப்பட்டால் 10-12 நாட்களில் விசா வழங்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |