மஞ்சள் பற்கள் வெண்மையா மாறனுமா? பேக்கிங் சோடாவை இப்படி செஞ்சு பாருங்க
நம் அன்றாட வாழ்வில் பல் துலக்குதல் ஓர் அத்தியாவசியமான ஒரு செயலாகும்.
காலையில் கண் விழித்ததும் நாம் ஒவ்வொருவரும் செய்ய நினைக்கும் முதல் காரியம் பல் துலக்குதலே. துலக்கி முடிக்கும் வரை நாம் வாயில் எச்சில் விழுங்கவும் தோன்றாது, துப்பவும் தோன்றாது.
எனவே பல் துலக்குதல் காலைக் கடன்களில் ஒன்றாகவேக் கருதப்பட்டு வருகின்றது. ஒரு சிலர் பல் துலக்குவதை கைவிடுகின்றார்கள். மேலும் சரியான முறையில் துலக்குவதும் இல்லை.
ஆகவே பல் துலக்குவதின் முக்கியத்துவம் முதல் ஏன் துலக்க வேண்டும் என்று வரை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.
பல் துலக்குதலின் முக்கியத்துவம்
பல் துலக்குதல் வாயின் சுகாதாரத்தை பாதுகாப்பது மட்டுமில்லாமல், பற்சிதைவையும், ஈறுகளில் உண்டாகும் நோய்களையும், மற்றும் வாய் துர்நாற்றத்தையும் தவிர்க்க உதவுகின்றது. எனவே தான் தினமும் பல் துலக்க வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகின்றார்கள்.
பற்களை எப்படி பாதுகாப்பது?
-
பற்களை குண்டூசி மற்றும் குச்சிகளை வைத்து குத்தக் கூடாது. அப்படி குத்துவதால் ஈறுகள் பாதிக்கப்படும்.
- புகையிலை மற்றும் புகை போன்று போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
- பற்களைப் பாதுகாக்க அதிகளவு ஊட்டச் சத்துக்களைக் கொண்ட உணவுகளையும், நார்ச்சத்து நிறைந்த பழங்களையும் சாப்பிட வேண்டும்.
- பல் துலக்கியவுடன் ஆள்காட்டி விரலைக் கொண்டு பல் மற்றும் ஈறுகளை நன்கு தேய்க்க வேண்டும்.
- பல் துலக்கும் பிரஷ்ஷை அடிக்கடி வெந்நீர் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு கலந்த நீரில் கழுவுவது நல்லது.
- எலுமிச்சை துண்டை உப்பில் போட்டு பற்களை தேய்த்தால் வெண்மையாக இருக்கும்.
- பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.
- சாப்பிட்டதும், ஒரு மணி நேரம் கழித்து பல் துலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்.
- தூங்க செல்வதற்கு முன்பு பல் துலக்கவேண்டும்.
- போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்துங்கள்.
- உணவு சாப்பிடும் நேரத்தில் மட்டும் இனிப்பு சாப்பிடவேண்டும்.
- ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உணவில் பால் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |