மொபைல் நீண்ட காலம் உழைக்க வேண்டுமா? இப்படித்தான் சார்ஜ் போட வேண்டும்
மொபைல் போனிற்கு அடிக்கடி சார்ஜ் செய்வதும், இரவு தூங்கும் போது சார்ஜ் போட்டுவிட்டு தூங்குவதும் சரியானதா என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம்.
தவறான அணுகு முறை
மொபைல் போனை சிறிது நேரம் பயன்படுத்திவிட்டு மீண்டும் சார்ஜில் போடுவதும், பிறகு மீண்டும் பயன்படுத்த தொடங்கி விட்டு சார்ஜ் சிறிது குறைந்ததும் மறுபடி சார்ஜில் போடுவது என்பது மிகவும் தவறான அணுகுமுறை ஆகும்.
@getty images
இன்றைய நவீன போன் பேட்டரியில் லித்தியம் மற்றும் அயான் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதன் வாழ்நாள் ஆனது இரண்டிலிருந்து மூன்று வருடங்கள் வரை வரும். கிட்டத்தட்ட 300 இல் இருந்து 500 முறை சார்ஜ் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இதன் பேட்டரி திறன் ஆனது 20% வரை குறைந்து விடும்.
எப்போது சார்ஜ் செய்ய வேண்டும்
இதனால் நாம் நம்முடைய போனை எப்போது சார்ஜ் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழலாம். நமது போனை முழுமையாக சார்ஜ் செய்த பின்பு அதன் பேட்டரி 20%க்கு குறையும் வரை பயன்படுத்திய பின்பு, அதனை மீண்டும் சார்ஜ் செய்ய வேண்டும்.
@istock
அவ்வாறு சார்ஜ் போட்ட பின்பு அடிக்கடி அதனை சார்ஜில் இருந்து எடுத்து பயன்படுத்துவதையும் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
உங்களுடைய மொபைல் பேட்டரி நீண்ட காலம் உழைக்க வேண்டும் எனில் அதன் பேட்டரி சதவீதமானது 20 சதவீதத்திற்கு குறைவாகவோ அல்லது 80 சதவீதத்திற்கு அதிகமாகவோ இருக்கும் போது சார்ஜில் போடக்கூடாது.
@getty images
ஏனெனில் லித்தியம் மற்றும் அயான் கொண்டு தயாரிக்கப்படும் பேட்டரிகள் அடிக்கடி முழுமையாக சார்ஜ் செய்வது கூடாது. அவ்வாறு அடிக்கடி முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில் அவை சூடாகும் வாய்ப்பு அதிகம்.
சுத்தமாக சார்ஜ் இறங்க விட கூடாது
பேட்டரியின் சதவீதம் பூஜ்ஜியத்திற்கு வரும் வரையும் நாம் அதனை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பூஜ்ஜியத்திற்கு வரும் வரை நாம் மொபைலை சார்ஜ் போடாமல் இருந்தால் அவை பேட்டரி திறனை குறைத்து விடும். எனவே முடிந்த அளவு மேலே கூறிய அளவீட்டிலேயே நாம் மொபைலை சார்ஜ் செய்ய வேண்டும்.
@istock
நாம் மொபைல் போன் வாங்கிய சில நாட்களுக்குள்ளேயே பேட்டரி சம்பந்தப்பட்ட பிரச்சனை வருகிறது என்றால் போனின் அமைப்பில் அல்லது நாம் சார்ஜ் செய்யும் முறையிலும் ஏதோ தவறு உள்ளது என அர்த்தம். எனவே முன்னர் கூறிய வழிமுறைகளை பயன்படுத்தி சார்ஜ் செய்வது நமது போனை நீண்ட காலத்திற்கு பயன்படுத்த உதவி செய்யும்.