இடுப்பு வரைக்கும் முடி வளரனுமா; இதை செய்து பாருங்க
பெண்கள் என்றாலே முடி தான் சிறப்பு. தற்போது எல்லாம் முகத்திற்கும் தரும் முக்கியத்துவத்தினை முடிக்கு தர விரும்புவீர்கள்.
அதற்கு முறையாக என்ன செய்ய வேண்டும் என்று தான் தெரியாது. கடைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி தலைக்கு பூசி இருக்கும் முடியையும் வளரவிடாமல் செய்துவிடுவீர்கள்.
ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு எப்படி 30 நாட்களுக்குள் முடி வளரச்செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
-
பாசிப்பயறு - 01 கப்
- முட்டை - 02
- தயிர் - 03 தே.கரண்டி
செய்முறை
-
முதல் நாள் இரவே பாசிப்பயறை ஒரு ஈரமான துணியில் காற்று புகாதளவிற்கு கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்த நாள் காலையில் அது முளைக்கட்டி இருக்கும்.
-
பின் மிக்ஸியில் தயிர் மட்டும் முளைக்கட்டிய பயறு சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
இறுதியாக அரைத்த பேஸ்டுடன் முட்டை இரண்டின் வெள்ளைக் கருவை மட்டும் சேர்த்து நன்றாக கலந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை குளிப்பதற்கு முதல் தலையில் எண்ணெய் தேய்த்து பின்னர் இதை உச்சி முதல் அடி வரை பூசி 20 நிமிடம் ஊறவிட்டு குளிக்க வேண்டும்.
இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால் நிச்சயமாக முடியின் வளர்ச்சியை காண்பீர்கள்.
மேலும் ஏன் இந்த இலகுவான மூன்று பொருட்களை பயன்படுத்துகின்றோம் என்று தெரிந்துக் கொள்ள இந்த வீடியோவை பார்க்கவும்.