வீட்டில் பணம் பெருக வேண்டுமா? அப்போ இப்படி செய்து பாருங்க
எல்லோரும் தமது வாழ்வில் பணப்புழக்கத்தை அதிகரித்துக்கொள்ள ஆன்மீக ரீதியாக சில வழிமுறைகளை பின்பற்றுகின்றனர்.
இதற்கமைய அனைவரும் தத்தமது வேலைகளை நிறைவு செய்து பூரணப்படுத்திக்கொள்ள பணம் முக்கியமானதொன்றாகும்.
வீடமைப்பு
அதிலும் வீடமைப்பானது மிக முக்கியமானதாகும். ஏனென்றால் ஆணவர்கள் பெண்ணவர்கள் அனைவரும் வேலைகளை நிறைவுற்று தமது அன்றாட பொழுதை கழிப்பது வீட்டில் தான்.
இந்நிலையில் வீடுகளில் வட்ட வடிவில் கடிகாரம் இருப்பது மிகவும் விசேடமானதாகும்.
சில பொருட்களை வீட்டில் எந்த பகுதியில் வைத்தாலும் செல்வம் அற்ற நிலைதான் காணப்படும்.
ஆகவே எந்த பொருட்களை எப்படி வைத்து கொள்ள வேண்டும். எந்த பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்பது பற்றி அறிந்துக்கொள்வோம்.
கடிகாரம்
கடிகாரம் என்பது தெற்கு திசையில் மாட்ட கூடாது. அந்த திசையில் எம தர்மன் இருப்பார். கடிகாரத்தில் தொடர்ந்து சத்தம் வரும்போது எமதர்மன் அந்த திசையை நோக்கி வருவார். இது நம் வாழ்வில் மோசமான விளைவுகளை உண்டாக்கும்.
இதனால் தெற்கு திசையில் கடிகாரம் மாட்டி இருந்தால் உடனடியாக மாற்றி விடுங்கள். வீடுகளில் வட்ட வடிவில் கடிகாரம் இருப்பது மிகவும் விசேடமானதொன்றாகும்.
எனவே வடக்கு திசையில் கடிகாரத்தை மாற்றினால் செல்வம் அதிகரிக்கும்.
நாட்காட்டி
நாட்காட்டி பொதுவாக தெற்கு திசையில் மாட்டப்பட்டு வடக்கு திசை நோக்கி இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.
எமதர்மனின் ஆட்சி நடக்கும் திசை என்பதால் தெற்கு திசைநோக்கி நாட்காட்டி இருக்க கூடாது. ஆனால் வடக்கு திசை என்பது மகாலட்சுமி, மாகா விஷ்ணு, குபேரன் இருக்கும் திசையாக பார்க்கப்படுகிறது.
இதனால் அந்த பகுதி நோக்கி நாட்காட்டி இருக்க வேண்டும்.
அத்துடன் பயத்தை சோகத்தை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் சாமி புகைப்படங்கள் இருப்பதை தவிர்ப்பது நல்லது.
ஆண்டு இறுதியில் நாட்காட்டியை தூக்கி வீசும் போது நம் வீட்டில் அருள் புரிந்த தெய்வதை வெளியில் தூக்கி வீசுவதற்கு சமனாகின்றது அதேபோல் பழைய நாட்காட்டிக்கு மேலாக புதிய நாட்காட்டியினை போடுவதையும் தவிர்க்க வேண்டும்.
தண்ணீர் சொட்டும் குழாய்
வீட்டில் தண்ணீர் சொட்டு சொட்டாக தண்ணீர் வெளியேறும் வகையில் பைப்புகள் இருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
அப்படி இருப்பது சனீஸ்வர பகவானுக்கு ஒவ்வாது என்று கருதப்படுகிறது. அதனால் வீட்டில் பைப்பில் தண்ணீர் வெளியானால் உடனடியாக சரி செய்ய வேண்டும்.
சேதமடைந்த காலணி
நமது காலணி பழையதாக இருந்தால் உடனடியாக மாற்றி விட வேண்டும். அது கிழிந்திருந்தால் அதை தொடர்ந்து பயன்படுத்த கூடாது.
இல்லையென்றால் தரித்திரம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. அதே போல் நம் காலணியை அடுத்தவருக்கு கொடுக்கவோ, அடுத்தவர் காலணியை நாம் வாங்குவதோ கூடாது.
துடைப்பம்
மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் துடைப்பம் மோசமான நிலையில் இருந்தால் பயன்படுத்த கூடாது. அதேசமயம் சேதமடைந்த துடைப்பத்தை வெளியில் தூக்கி எறிந்தால் கூட செவ்வாய், வெள்ளி தினங்களில் செய்யக்கூடாது என்று கூறப்படுகிறது.
உடைந்த கண்ணாடி
வீட்டில் உடைந்த கண்ணாடிகள் இருந்தால் மனதில் விரிசலை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் கண்ணாடி பாத்திரங்கள், பைக், கார் கண்ணாடி போன்ற எந்த பொருட்கள் உடைந்திருந்தாலும் உடனே மாற்றி விட வேண்டும்.
காய்ந்த செடிகள்
வீடுகளில் காய்ந்து போன செடிகள் இருந்தால் அதை உடனடியாக அகற்றி விட வேண்டும். இது நமக்கு வரக்கூடிய ஒரு தீமையை அந்த செடி வாங்கி கொள்வதாக பார்க்கப்படுகிறது.
இதனால் காய்ந்த செடிகளை உடனடியாக அகற்றி விட வேண்டும்.
உடைந்த மரசாதனங்கள்
உங்கள் வீட்டில் மிகப் பழைய உடைந்த சாதனங்கள் இருந்தால் உடனடியாக அகற்றி விடுங்கள். இதை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பண கஷ்டத்தையும், தொல்லைகளையும் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
ஒரு கட்டத்தில் இது நமக்து தரித்திரம் பிடித்த சூழலை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது.
மேலும் முக்கியமான ஒன்றாவது பணப்பை உங்கள் பணப்பை கிழிந்த நிலையில் இருந்தால் உடனடியாக மாற்றி விடுங்கள். இந்து சாஸ்திரத்தில் செல்வம் மகாலட்சுமியை குறிக்கும் என கூறப்படுகிறது.
இதனால் உங்கள் பணப்பை எப்போதும் சுத்தமாக பார்த்து கொள்ள வேண்டும். அப்படி இல்லை என்றால் மகாலட்சுமியின் நேர் எதிரான மூதேவி அந்த பணப்பையில் குடியேறிவிடும்.
இதனால் நமக்கு தொடர்ச்சியாக துன்பங்கள் ஏற்பட்டு கடன் வாங்கும் சூழல் ஏற்படும் என்று நம்பபடுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |