வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது எப்படி?
உடல் ரீதியாக குழந்தைப் பெற்றெடுக்க முடியாதவர்கள் தான் இந்த முறையை கடைப்பிடிப்பார்கள்.
அதாவது ஒரு பெண் மற்றொரு பெண்ணுக்காக தனது கருப்பப்பையை பயன்படுத்தி குழந்தைப் பெற்றெடுக்கும் முறை இதுவாகும்.
இந்த முறையானது இரண்டு வகையாக எடுத்துக் கொள்ளப்படும். அதாவது மரபியல் தாய், கருசுமக்கும் தாய் என கூறுவார்கள்.
மரபியல் தாய்
வாடகைத்தாயின் கருமுட்டையே கருவுருவாக்கத்தில் உதவி இருந்தால் அவரே குழந்தையின் மரபியல் தாய் எனப்படுவார்.
கருசுமக்கும் தாய்
பெண்ணின் கருமுட்டையானது ஒரு ஆணிடமிருந்து பெறப்படும் விந்துடன் கருவூட்டப்பட்டு, வாடகை தாயின் கர்ப்பப்பைக்குள் வைக்கும் முறை கருசுமக்கும் தாய் எனப்படுகிறது.
இந்த முறையை செய்பவர்கள் மேற்கொள்ளபட வேண்டிய முறை
வாடகைத்தாய் மூலம் குழந்தைப்பெறும் தம்பதிகள் 5ஆண்டுகளாவது திருமணம் முடித்து தனது வாழ்க்கையை வாழ்ந்திருக்க வேண்டும்.
வாடகைத் தாய் குழந்தை பெற விரும்பும் தம்பதியின் உறவினராக கட்டாயம் இருக்க வேண்டும்.
அவர் திருமணமாகி ஏற்கனவே குழந்தை பெற்றவராக இருக்க வேண்டும்.
கணவன் இல்லாதவர்கள் மற்றும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்பவர்கள் வாடகைத் தாய் முறை மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ள தடையுள்ளது.