WhatsApp-ல் வரும் மெசேஜ்களை Block செய்யாமல் தவிர்ப்பது எப்படி? புதிய செம அப்டேட் அறிமுகம்
உலகில் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வரும் வாட்ஸ் அப்பிற்கு அந்த நிறுவனம் தொடர்ந்து பல அப்டேட்களை கொடுத்து வருகிறது.
அந்த வகையில் தற்போது புதிய அப்டேட் ஒன்றை அந்த நிறுவனம் கொடுத்துள்ளது. ஆனால் இது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
ஏனெனில், ஒரு சிலருக்கு தேவையில்லாத மெசேஜ்களை சிலர் அனுப்புவர். ஆனால் அவர்களை Block செய்யவும் முடியாது, அந்த மெசேஜை நாம் பார்த்துவிட்டால், கண்டிப்பாக பதில் அளிக்காமல் இருக்க முடியாது.
இப்படி போன்ற சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு தான் வாட்ஸ் ஆப் ஒரு அப்டேட் கொடுத்திருக்கிறது. அதன் பெயர் தான் Archived Chats folder.
அதாவது இதன் மூலம் நீங்கள் யாருடைய எண்ணில் இருந்து மெசேஜ் வருவதை தவிர்க்க நினைக்கிறீர்களோ, அந்த எண்ணை எல்லாம் நீங்கள் இதில் வைத்துவிட்டால், அந்த மெசேஜ் உங்களுக்கு காட்டப்படாது. ஆனால், அந்த மெசேஜ் Archived Chats-ல் இருக்கும், உங்களுக்கு தேவை என்றால் நீங்கள் அதை க்ளிக் செய்து உள்ளே சென்று பார்க்கலாம்.
அவர்கள் அனுப்பியிருக்கும் மெசேஜ் வந்திருக்கும். அதுவே உங்களுக்கு தேவையில்லை என்றால் அதை நீங்கள் பார்க்க தேவையில்லை.
அது எப்படி என்று கீழே பார்ப்போம்.
- முதலில் வாட்ஸ் ஆப்பை ஒபன் செய்து கொள்ள வேண்டும்.
- இரண்டாவதாக அந்த வாட்ஸ் ஆப்பில் நீங்கள் தேவையில்லாத எண் என்று விரும்பும் எண்ணை லாங் கிளிக் செய்யவும்.
- அதன் பின் அது டிக் ஆனவுடன், மேலே ஒரு அம்பு குறி போன்று Archive Folder Box இருக்கும். அதை நீங்கள் கிளிக் செய்துவிட்டால் அது அப்படியே Archived ஆகிவிடும். இதில் நீங்கள் எத்தனை நம்பரை Archive செய்ய நினைக்கிறீர்களோ செய்து கொள்ளலாம்.
- குறிப்பு: இதில் நீங்கள் Archive செய்யும் நபரின் மெசேஜ்கள் மட்டுமே உங்களுக்கு நோட்டிபிகேசனாக காட்டாது. ஆனால் அவர்கள் அனுப்பும் மெசேஜ்கள் உங்களுடைய Archive Folder-ல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.