Deepfake வீடியோக்களை எவ்வாறு கண்டுபிடிப்பது? இவற்றை கவனித்தாலே போதும்
Deepfake Video என்று சொல்லக்கூடிய போலி வீடியோ தொழில்நுட்பத்தால் மக்கள் அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
ஒருவரின் முகத்தை வேறொருவரின் முகமாக வைத்து உருவாக்கப்டும் போலியான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ வைரலானதை அடுத்து, இந்த தலைப்பு விவாதத்திற்கு வந்தது.
ஆனால், இதுபோன்ற போலி வீடியோக்களை அடையாளம் கண்டு கொள்ளலாம். அதற்கான சில டிப்ஸ் இதோ..
சிலர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்குகின்றனர். குறிப்பாக பிரபலங்களை குறிவைத்து இதுபோன்ற வீடியோக்களை தயாரித்து வைரலாக்கி வருகின்றனர். இருப்பினும், சில காரணிகளின் அடிப்படையில் இதுபோன்ற போலி வீடியோக்களை அடையாளம் காண முடியும்.
Deepfake Videoக்களை எவ்வாறு கண்டுபிடிப்பது? இவற்றைக் கவனித்தாலே போதும்..
டீப்ஃபேக் வீடியோக்களில் மனித அசைவுகள் இயற்கைக்கு மாறானது. கண் இமைகளின் இயக்கம் இயற்கையாக இருக்காது மற்றும் முகபாவனையில் எந்த மாற்றமும் இருக்காது. சூழலுக்கு ஏற்ப முகபாவனைகள் இல்லாவிட்டாலும் அது போலியான காணொளியாகவே கருதப்பட வேண்டும்.
மேலும் வீடியோவில் காணப்படும் முகங்கள் போலியாகத் தெரிந்தாலும், அந்த வீடியோ போலியான வீடியோவாக இருக்கலாம். மூக்கு, வாய், கண்கள் இயற்கைக்கு மாறானதாகத் தெரிந்தாலும், உடல் அசைவுகள், முக அசைவுகள் வித்தியாசமாகத் தெரிந்தாலும், அது நிச்சயம் போலியான வீடியோதான்.
போலி வீடியோக்களை அடையாளம் காண்பதற்கான மற்றொரு முக்கிய அம்சம், வீடியோவில் உள்ள ஆடியோவுடன் பொருந்தக்கூடிய முக அசைவுகள் இல்லாதது. ஆடியோ லிப் சின்க் ஆகாது.
போலி வீடியோக்கள் உயர் தரத்தில் இருக்காது. பிக்சல்கள் பிரிக்கப்பட்டதைப் போல வீடியோ தெளிவற்றதாக தெரியும்.
மேலும், அந்த வீடியோவை யார் வெளியிட்டார்கள் என்பதையும் பார்க்க வேண்டும்.
வீடியோவை வெளியிட்டவரின் நம்பகத்தன்மையை பொறுத்தே அந்த வீடியோ உண்மையானதா அல்லது போலியானதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Rashmika Mandanna Deepfake Video, How to identify Deepfake Videos, deep fake app, deep fake web