உங்கள் iPhone-ல் iOS 15 Beta வெர்ஷனை Install செய்வது எப்படி?
ஆப்பிள் நிறுவனம் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள iOS 15 Beta-வை இன்ஸ்டால் செய்யும் வழிமுறைகள் குறித்து இங்கு பார்ப்போம்.
ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது.
குறிப்பாக தனித்துவமான இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்நிறுவனத்தின் சாதனங்கள். அதேபோல் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்குகிறது ஆப்பிள் நிறுவனம்.
இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 15 Public Beta வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இதில் தனித்துவமான அம்சங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள iOS 15 Public Beta வெர்ஷனை நீங்கள் இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு உங்களது போனில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் பேக்கப் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
ஐபோன் 12 மாடல்கள், ஐபோன் 11 மாடல்கள், ஐபோன் எக்ஸ்எஸ் மற்றும் எக்ஸ்எஸ் மேக்ஸ், ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் எக்ஸ், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ், ஐபோன் எஸ்இ, ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் உள்ளிட்ட சாதனங்களுக்கு இந்த ஐஓஎஸ் 15 Public Beta வெர்ஷன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
iOS iOS 15 Public Beta-வை இன்ஸ்டால் செய்யும் வழிமுறைகள் இதோ:
1, முதலில் உங்களது ஐபோனில் இருக்கும் safari browser-ஐ திறக்கவும், அதில் beta.apple.com என்று டைப் செய்து உள்நுழையவும்.
2, அடுத்து நீங்கள் தேர்வுசெய்த ஆப்பிள் தளத்தில் Sign up செய்ய வேண்டும். பின்னர் அந்த ஓஎஸ் சார்ந்த விவரங்கள் தெரியும். அதன்பிறகு, ஆப்பிள் பீட்டா மென்பொருள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
3, நீங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டபின்பு Guide for Public Betas என்ற ஆப்ஷன் தெரியும். அதில் ஐஓஎஸ், ஐபேட்ஓஎஸ், டிவிஓஎஸ், வாட்ச்ஓஸ் என்ற ஆப்ஷன்கள் இருக்கும். அவற்றில் ஐஓஎஸ் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
4, நீங்கள் ஐஓஎஸ் என்பதை தேர்வு செய்தவுடன் Get Started section விருப்பம் தெரியும், அதில் enroll your iOS device என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
5, enroll your iOS device என்பதை நீங்கள் கிளிக் செய்து கீழே வந்தால் install profile விருப்பம் தெரியும், அதில் download profile என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
6, நீங்கள் profile download செய்த பின்பு உங்களது போன் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்றால் profile downloaded என்றுகாண்பிக்கும், அதை கிளிக் செய்தபின்பு ஐஓஎஸ் 15 பீட்டா வெர்ஷன் தெரியும், பின்பு எளிமையாக இன்ஸ்டால் செய்யலாம்.[3OLJWB ]