கணினியை நீண்டக்காலம் பாவிக்க வேண்டுமா? அப்போ இப்படி செய்து பாருங்க
தொழிநுட்பம் வளர்ந்து வரும் இவ்வுலகில் நாம் அனைத்து சாதனங்களையும் பயன்படுத்தி வருகின்றோம்.
கணினி, தொலைபேசி மற்றும் தொலைக்காட்சி என்று பல இலத்திரனியல் சாதனங்களை பயன்படுத்துகின்றோம்.
அதிலும் கணினியின் பயன்பாடானது அதிகம் தான். ஆகவே தினமும் பயன்படுத்தக்கூடிய கணினியை எவ்வாறு பாதுக்காக்கலாம் என்று தெரியுமா?
இந்த பதிவின் மூலம் எப்படி தங்களது கணினியை பாதுகாக்கலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
கணினியை பாதுகாப்பது என்றால் என்ன?
கணினி பாதுகாப்பு என்பது கணினி அமைப்புகள் மற்றும் தகவல்களை அங்கீகரிக்கப்படாத பயன்பாட்டிலிருந்து பாதுகாப்பதாகும்.
அதாவது ஒருவரின் தனிப்பட்ட விடயங்களை பாதுகாப்பதாகும்.
உங்கள் கணினியின் பாதுகாப்பை இரண்டு வழிகளில் செய்யலாம்.
அதாவது Hardware மற்றும் Software என்று அழைக்கப்படும்.
எவ்வாறு பாதுகாக்கலாம்?
Software முறையை முடிந்தவரை Update செய்துக்கொண்டே இருக்க வேண்டும்.
சமீபத்திய பாதுகாப்பு அம்சங்களுக்கு Update Software தேவைப்படுகிறது என்பதற்கு Windows 11 சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது.
அதாவது, கணினியுடன் சேர்க்கப்பட வேண்டிய பல அம்சங்கள் Windows 11 க்கு கட்டாய கூறுகளாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும், Smart Phone மட்டத்தில், Biometrics அதாவது உயர் நிலை Camera மற்றும் Fingerprints ஆகவை எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக Software இல் உள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்து, புதிய Update கொண்டு வரவேண்டும்.