30 வயதிலும் முகம் இளமை குறையாமல் இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்..
பெண்களுக்கு வயது ஏறினாலும் எப்பொழுதும் இளமை குறையாமல் இருக்கவே விரும்புவார்கள். ஆனால் 30 வயதை தொட்ட பிறகு ஆண்கள், பெண்கள் இருவருக்குமே சுருக்கங்கள், முதுமை தோற்றம் போன்றவை எட்டிப்பார்க்க ஆரம்பித்துவிடும்.
இதற்கு சிலர் பலவிதமான சிகிச்சைகளும் எடுத்து கொள்கின்றனர். ஆனால் சிகிச்சை எடுத்து கொள்வதன் மூலம் பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
இயற்கை முறையிலே நம்மை இளமையாக வைத்து கொள்ள முடியும். இளமை குறித்து சில டிப்ஸ்களை பார்க்கலாம்.
30 வயதிலும் இளமையாக இருப்பது எப்படி?
முகத்தில் எப்பொழுதும் ஈரப்பதம் அவசியம் என்பதால் தினமும் கற்றாழையை பயன்படுத்துவது முகத்தில் சுருக்கம் வராமல் தடுக்கின்றது.
இதனை பயன்படுத்துவதால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவை அறவே நீங்கி விடும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும்.
முல்தானி மெட்டி முகத்திற்கு புதிய பொலிவை கொடுக்கும். இதனால் முல்தானி மெட்டிவுடன், ரோஸ் வாட்டர் போன்றை கலந்து வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தி வந்தால் 30 வயதிலும் சருமம் இளமையாக இருக்கும்.
தினமும் நீராடிய பிறகு முகத்தில் ரோஸ் வாட்டரை கொண்டு மசாஜ் செய்தால் முகம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
மழை காலத்தில் முகத்தில் அடிக்கடி வெடிப்புகள், வறட்சி போன்றவை ஏற்படும். இதற்கு சுத்தமான தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் சருமம் பட்டு போன்று மென்மையாக இருக்கும்.