திருமணத்திற்கு பிறகு உங்கள் கல்யாண வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும் தான்!
Life
Husband
Wife
Relationship
Marriage life
By Logeswari
மண வாழ்க்கை சுமூகமாக அமைந்தாலே மற்ற அனைத்து விஷயங்களும் சிறப்பாக அமைந்துவிடும் என்று கூறுவார்கள். சில விஷயங்களை தனது மனைவிகளுடன் துணையாக நின்றாலே போதும்.
திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். ஒவ்வொரு கணவரும் தங்களது மனையிடம் எப்படி நடந்து கொள்வது குறித்து பார்க்கலாம்..
- உங்கள் துணையை எதிர்மறையான வார்த்தைகளால் விமர்சிப்பதைத் தவிருங்கள். அவர் ஏதேனும் புது விஷயங்கள் செய்ய முன்னெடுத்தால் அதை எதிர்மறையாக சொல்லி விமர்சிக்காதீர்கள். அவ்வாறு செய்வதால் அது அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்கும்.
- பாராட்டுகள் பொதுவாகவே நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். குறிப்பாக கணவன் மனைவிக்குள் செய்து கொள்ளும் பாராட்டுகள் வாழ்கையை இன்பமானதாக மாற்றும். அதற்கு அவர்கள் பெரிதாக ஏதேனும் செய்தால்தான் பாராட்ட வேண்டும் என்றில்லை. உங்களுக்காக அவர் செய்யும் சின்னச் சின்ன செயல்களைக் கூட பாராட்டலாம்.
- உங்களுக்குள் இருக்கும் ஈகோவைத் தூக்கி எறியுங்கள். அடுத்த முறை நீங்களே தேங்ஸ் மற்றும் சாரி சொல்லிப் பாருங்கள். உங்கள் உறவில் சிறந்த மாற்றத்தைக் கட்டாயம் உணர்வீர்கள். இப்படி ஒருவரையொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வதால் உறவை நீண்ட நாட்கள் பயணிக்கச் செய்யும்.
- மூன்றாம் நபர்களின் உறவு உங்கள் காதல் உறவைச் சிதைப்பதாக உணர்ந்தால் உடனே அவர்களின் நட்பை குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் செலவழிக்கும் நேரம் குறைவதைப் போல் உணர்ந்தால் அதற்கான காரணங்களைக் கண்டறிந்து உடனே சரிசெய்யுங்கள்.
- எந்த ஒரு செயலையும் இருவரும் பகிர்ந்து செய்வது உங்கள் நெருக்கத்தை அதிகரிக்கும். உதாரணமாக சமையல், வீட்டை சுத்தம் செய்தல் போன்ற வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US