தினமும் வாங்கும் பாலில் கலப்படம் உள்ளதா என்று தெரிந்துக் கொள்ள இதை செய்து பாருங்க
பொதுவாகவே தினசரி பயன்படுத்தப்படும் உணவு பொருட்களில் கலப்படம் இருப்பது வழக்கம்.
அதை எப்படி கண்டுப்பிடிப்பது என்று யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
அதிலும் பாலில் கலப்படம் இருந்தால் கண்டுப்பிடிப்பதற்கு மிகவும் கடினம்.
பாலை குழந்தை முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துவார்கள்.
ஆகவே பாலில் கலப்படம் இருப்பதை எவ்வாறு கண்டுப்பிடிக்கலாம் என்று பார்க்கலாம்.
கலப்படத்தை எவ்வாறு கண்டுப்பிடிக்கலாம்?
சாதாரண கண்ணாடியில் சாய்வான மேற்பரப்பில் ஒரு துளி பாலை வைக்க வேண்டும்.
முடிவை எவ்வாறு பார்ப்பது?
சுத்தமான பால் துளி அங்கிருந்து சரிந்து நகரும்போது, வெண்மையான பாதையை உருவாகும்.
தண்ணீரில் கலப்படம் செய்யப்பட்ட பால், தடம் புரளாமல் உடனடியாக நகரும்.
கலப்படமான பால் பயன்படுத்தினால் கலாரா, வயிற்றுப்போக்கு, நீரால் பரவும் நோய்கள் என்பன ஏற்படும்.
ஆகவே பாலை கொதிக்க வைத்தால் பல பாக்டீரியாக்கள் அழிபடும்.
இது தொடர்பாக “உங்கள் பாலில் தண்ணீரில் கலப்படமா? ஒரு எளிய சோதனை மூலம் நீங்கள் அதை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது இங்கே,” என்று FSSAI ஒரு ட்வீட் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Is your milk adulterated with water? Here is how you can check it through a simple test.#FSSAI #EatRightIndia#CombatAdulteration#foodsafetyhttps://t.co/SB1ktv09KU
— FSSAI (@fssaiindia) April 13, 2023